சனி, 10 செப்டம்பர், 2016

பாஜக MLA மகனின் கொடூர தாக்குதல் .. வீதியில் இளைஞர்கள் மீது லத்தியால் ..


சத்தீஸ்கர் மாநிலத்தில், காங்கிரசிலிருந்து விலகி பா.ஜ.,வில் இணைந்த மந்துராம் பவார். மந்துராம் பவார், காங்கிரஸ் சார்பில் எம்.எல்.ஏ.,வாக இருந்தவர், 2015ல் பா.ஜ.,வில் இணைந்தார். மந்துராம் பவார் மகன் நானு பவார். இவர் தனது சொகுசு காரில், நண்பர்களுடன் சென்று கொண்டிருந்தார். தலைநகர் ராய்ப்பூரிலிருந்து 200 கி.மீ., தூரத்தில் உள்ள கேர்கட்டா பகுதியில், அவரது காருக்கு முன்னால் இரு சக்கர வாகனத்தில் சென்றவர்கள் காருக்கு வழிவிடவில்லை எனக்கூறப்படுகிறது. இதனால் ஆத்திரமடைந்த நானுபவாரும், அவரது நண்பர்களும் காரிலிருந்து இறங்கி இரு சக்கர வாகனத்தில் வந்தவர்களை பிடித்து கடுமையாக தாக்கியுள்ளனர். இதனை அங்கிருந்தவர்கள் செல்போனில் படம் பிடித்து சமூக வலைதளத்தில் வெளியிட்டுள்ளனர். வீடியோ ஆதாரம் இருந்தும் இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்யவில்லை. நக்கீரன்.இன்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக