புதன், 7 செப்டம்பர், 2016

கன்னய்யா குமார் மீது எந்த நடவடிக்கையும் கூடாது: ஜே.என்.யூ பல்கலைக்கு நீதிமன்றம் உத்தரவு

டெல்லி ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழக மாணவர் சங்க தலைவர் கன்னய்யா குமார் மீது எவ்வித நடவடிக்கையும் எடுக்க கூடாது என்று, டெல்லி உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
வரும் 19ஆம் தேதி வரை அவர் மீது அபராதம் உள்ளிட்ட எந்த நடவடிக்கையும் எடுக்க வேண்டாம் என்று, பல்கலைக்கழகத்தை உயர் நீதிமன்றம் அறிவுறுத்தி உள்ளது. கடந்த பிப்ரவரி மாதம் 19ஆம் தேதி பல்கலைக்கழகத்தில் நடந்த பாகிஸ்தானுக்கு ஆதரவான சர்ச்சைக்குரிய நிகழ்ச்சி தொடர்பான வழக்கில், நீதிமன்றம் இவ்வாறு கூறியுள்ளது.
முன்னதாக உமர் காலித், பட்டாச்சார்யா உள்ளிட்ட 19 மாணவர்கள் மீதும் நடவடிக்கை எடுக்க கூடாது என்று நீதிமன்றம் அறிவுறுத்தியது குறிப்பிடத்தக்கது. 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக