புதன், 7 செப்டம்பர், 2016

மேயர் மறைமுகத் தேர்வு: தமிழக அரசுக்கு நீதிமன்றம் நோட்டீஸ்! கவுன்சிலர்களை சம்பாதிக்க விடுங்கப்பா?

மாநகராட்சி, நகராட்சி மற்றும் பேரூராட்சித் தலைவர்களை மக்களே
நேரடியாக தேர்வு செய்யும் முறையை மாற்றி வார்டு உறுப்பினர்களே, தலைவர்களை தேர்வு செய்யும்புதிய சட்டத்திருத்த மசோதாவை செப்டம்பர் 2ஆம் தேதி சட்டப்பேரவையில் நிறைவேற்றியது அதிமுக அரசு. இதற்கு எதிர்க்கட்சிகள் அனைத்தும் கடுமையான எதிர்ப்பைத்தெரிவித்தன. மேயரை மறைமுகத் தேர்வு செய்யும்முறையை ரத்து செய்து, மக்களே நேரடியாகத் தேர்வு செய்யும் பழைய முறையை அமல்படுத்த உத்தரவிட வேண்டும் என்று சென்னைகிண்டியைச் சேர்ந்த சுந்தரராஜன் என்பவர், சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு ஒன்றை தாக்கல் செய்திருந்தார். அந்த மனுவில் அவர் கூறியிருப்பதாவது, தமிழகத்தில்மேயர்களை நேரடியாக மக்கள் தேர்தலில் தேர்வுசெய்யும் முறையை மாற்றி, மக்களால் தேர்ந்தெடுக்கப்படும் கவுன்சிலர்கள்மூலம் தேர்வுசெய்யும் முறையை தமிழக அரசுகொண்டுவந்துள்ளது. இதன்மூலம், மேயர் பதவிக்கு ஆட்களைத் தேர்வு செய்யும்போது குதிரைபேரம் நடைபெறும். இதில் மிகப்பெரிய முறைகேடுகள் நடைபெறும்.

எனவே, கவுன்சிலர்கள்மூலம் மறைமுகமாக மேயரை தேர்வுசெய்யும் முறையை ரத்து செய்ய வேண்டும். மக்களே நேரடியாக மேயரைத் தேர்வுசெய்யும் பழைய முறையைஅமல்படுத்த தமிழக அரசுக்கு உத்தரவிட வேண்டும். மேலும், மேயர்மீது நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வந்து, அவரை பதவிநீக்கம் செய்ய கடந்த ஆண்டு தமிழகஅரசு சட்டத்திருத்தம் கொண்டு வந்துள்ளது. இந்த சட்டத்திருத்தத்தையும் ரத்து செய்யவேண்டும் என்று அதில் கூறப்பட்டுள்ளது.
இந்த மனு, தலைமை நீதிபதி சஞ்சய்கி‌ஷன் கவுல், நீதிபதி ஆர்.மகாதேவன் ஆகியோர்முன்பு இன்று விசாரணைக்கு வந்தது. மனுவை விசாரித்த நீதிபதிகள், இந்த மனுவுக்கு 4வாரத்துக்குள் பதிலளிக்கும்படி தமிழக அரசுக்கு நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டனர்.  மின்னம்பலம்.com

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக