செவ்வாய், 20 செப்டம்பர், 2016

திருநாவுக்கரசர் : திமுக காங்கிரஸ் கூட்டணி உள்ளூராட்சி தேர்தலிலும் தொடரும்

கருணாநிதியை சந்தித்து மரியாதை செலுத்துகிறார் திருநாவுக்கரசர்.
கருணாநிதியை சந்தித்து மரியாதை செலுத்துகிறார் திருநாவுக்கரசர். கருணாநிதியை சந்தித்து மரியாதை செலுத்துகிறார் திருநாவுக்கரசர். உள்ளாட்சித் தேர்தலிலும் திமுக- காங்கிரஸ் கூட்டணி தொடரும் என்று தமிழக காங்கிரஸ் கமிட்டி தலைவர் திருநாவுக்கரசர் கூறியுள்ளார். தமிழக காங்கிரஸ் தலைவர் திருநாவுக்கரசர், திமுக தலைவர் கருணாநிதியை அவரது கோபாலபுரம் இல்லத்தில் இன்று சந்தித்துப் பேசினார். அதற்குப் பிறகு செய்தியாளர்களிடம் திருநாவுக்கரசர் பேசியதாவது: தமிழக காங்கிரஸ் தலைவராகப் பொறுப்பேற்ற பிறகு கருணாநிதியைச் சந்தித்து வாழ்த்து பெற திட்டமிட்டிருந்தேன். அவருக்கு தொடர்ந்து நிகழ்ச்சிகள் இருந்ததால் இன்றுதான் வாய்ப்பு கிடைத்தது.
இது மரியாதை நிமித்தமான சந்திப்பு. கடந்த சட்டப்பேரவைத் தேர்தலில் திமுகவுடன் கூட்டணி அமைத்துப் போட்டியிட்டோம். அந்தக் கூட்டணி இப்போதும் தொடர்கிறது. உள்ளாட்சித் தேர்தலில் தொகுதி பங்கீடு குறித்து பேச்சு நடத்த இருக்கிறோம். மு.க.ஸ்டாலின்- ஜி.கே.வாசன் சந்திப்பு குறித்து நான் கூறுவதற்கு எதுவும் இல்லை. இரு அரசியல் தலைவர்கள் சந்திப்பது புதிய நிகழ்வல்ல. இவ்வாறு திருநாவுக்கரசர் கூறினார். tamiltheindu.com

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக