திங்கள், 19 செப்டம்பர், 2016

விஜயகாந்த் உள்ளூராட்சி தேர்தலில் மக்கள் நல கூட்டணியில்...

உள்ளாட்சி தேர்தலிலும், மக்கள் நலக் கூட்டணியில் தொடர, விஜயகாந்த்
விரும்புவ தாக தகவல்கள் வெளியாகியுள்ளது. சட்டசபை தேர்தலின் போது, 'தி.மு.க.,வுடன் கூட்டணி அமைக்க வேண்டும்' என, தே.மு. தி.க.,வினர் விரும்பினர். ஆனால், மக்கள் நலக்கூட்டணியில் இணைந்து, தே.மு.தி.க., தேர்தலை சந்தித்தது. இந்த முடிவால், விரக்தி அடைந்த மாநில நிர்வாகிகள், எம்.எல்.ஏ.,க்கள், மாவட்ட செயலர்கள் பலர், கட்சியில் இருந்து விலகினர். அத்துடன், சட்டசபை தேர்தலில், தே.மு.தி.க., < படுதோல்வி அடைந்ததும், மேலும் பலர் கட்சியில் இருந்து வெளியேறினர். இதனால், கட்சியில் உள்ள நிர்வாகிகள் பலரும், 'உள்ளாட்சி தேர்தலில் போட்டியிட வேண்டாம்; மக்கள்நலக்கூட்டணியை கைகழுவுங்கள்' என, கட்சித் தலைவர் விஜயகாந்திடம், வலியுறுத்தி வருகின்றனர்.


ஆனால், 'உள்ளாட்சி தேர்தலில், தே.மு.தி.க., போட்டி யிடும்' என, சமீபத்தில், விஜயகாந்த் அறிவித்தார். இருப்பினும், வேட்பாளர்களை தேடி பிடிக்க வேண்டிய நிலை உள்ளதை உணர்ந்த அவர், வேறு வழியின்றி, மக்கள் நலக்கூட்டணியை தொடர விரும்புவதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

இதுகுறித்து, தே.மு.தி.க.,வட்டாரங்கள் தெரிவித்ததாவது:

உள்ளாட்சிகளில், 1.50 லட்சத்திற்கும் மேற்பட்ட பதவி கள் உள்ளன. அனைத்து பதவிகளுக்கும் போட்டியிட ஆட்கள் இல்லை; இருப்பவர்களும் போட்டியிட தயங்குகின்றனர். எனவே, மக்கள் நலக் கூட்டணி யுடன் கூட்டணியை தொடர, விஜயகாந்த் விரும்புகிறார்.

அப்படி செய்தால், உள்ளாட்சி பதவிகளை பகிர்ந்து கொள்ள முடியும்; குறைந்த இடத்தில், தே.மு.தி.க., போட்டியிட்டு சமாளிக்கலாம் என்பதே, விஜயகாந்தின் கணக்கு. இதுகுறித்து, மாவட்ட செயலர்களை அழைத்து கருத்து கேட்டபின், முடிவை விஜயகாந்த் அறிவிப்பார். இவ்வாறு தே.மு.தி.க.,வட்டாரங்கள் தெரிவித்தன. - நமது நிருபர் -  தினமலர்.காம்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக