புதன், 14 செப்டம்பர், 2016

உ.பி., சமாஜ்வாடிகட்சி தலைவராக சிவ்பால்சிங்யாதவ் நியமனம்

லக்னோ: உ.பி.,மாநிலத்தின் அதிரடி அரசியல் திருப்பமாக சமாஜ்வாடி கட்சி
தலைவராக சிவ்பால்சிங்யாதவ் நியமனம் செய்யப்பட்டுள்ளார். இது குறித்து கூறப்படுவதாவது: உ.பி., மாநிலத்தின் முதல்வராக இருந்து வரும் அகிலேஷ்யாதவ் சமாஜ்வாடி கட்சியின் மாநில தலைவராகவும் இருந்து வந்துள்ளார். தற்போது மாநிலத்தில் ஏற்பட்டுள்ள அரசியல் குழப்பங்களை தீர்க்கவும், அடுத்தாண்டு நடைபெற உள்ள சட்டசபை தேர்தல்களில் வெற்றி பெற வேண்டும் என நோக்கத்தில் உறவினரான சிவ்பால்சிங்யாதவ்வை கட்சியின் தலைமை பொறுப்பில் நியமிக்கப்பட்டுள்ளார்.இதற்கான உத்தரவை கட்சித் தலைவர் முலாயம் சிங் யாதவ் பிறப்பித்துள்ளா்.  dinamalar.com

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக