சனி, 3 செப்டம்பர், 2016

சவுதியில் கடவுள் மறுப்பாளருக்கு 10 ஆண்டுகள் சிறை! 2000 கசையடி 4000 ரியால் அபராதம்.. முதல்ல உயிரோட இருக்கணுமே?


கடவுளை மறுப்பவன் நான் என்று, ஒருவர் ட்விட்டரில் ட்வீட் செய்திருந்தார். இது, முஸ்லிம் மதக் கொள்கைகளுக்கு எதிராக உள்ளதாகக் கூறி அந்த இளைஞருக்கு 2000 கசையடிமற்றும் 10 ஆண்டு சிறைத் தண்டனையும் 4000 ரியால் அபராதமும் விதித்து சவுதி அரேபிய நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
28 வயதான அவர், தன்னுடைய கடவுள் மறுப்புக் கொள்கையை பல வருடமாக ட்விட்டரில் பதிந்துவந்திருக்கிறார். கிட்டத்தட்ட, 600 ட்வீட்டுகள் கடவுள் மறுப்பு குறித்துஎழுதப்பட்டவை என்பதை சவுதி போலீஸார் கண்டறிந்து தண்டனை வாங்கிக்கொடுத்துள்ளனர். சவுதி அரேபியாவில், இரண்டு வருடத்திற்குமுன் அறிமுகப்படுத்தப்பட்டசட்டத்தின் கீழ், ‘நாத்திகம் என்பது தீவிரவாதம்’ என வரையறுக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், சமூக ஊடகப் பதிவுகள் அவரது நம்பிக்கைகளைப் பிரதிபலிக்கிறது என்றும் அதை வெளிப்படுத்த தனக்கு உரிமை இருக்கிறது என்றும் தண்டனைபெற்றவர்கூறியுள்ளார்.  பகுத்தறிவு முகாம்களில் ஊடுருவி இந்து மதத்தை மட்டும் தாக்கும் போக்கிரிகள் தப்பி தவறி கூட  தாம் சார்ந்த இஸ்லாமிய காட்டுமிராண்டிதனங்களை தாக்குவதே இல்லை

மேலும் அவர், குரான் வசனங்களை கோடிட்டுக் காட்டி, அனைத்து இறைத் தூதர்களும் பொய்யானவர்கள் என குற்றம்சாட்டியுள்ளார் . மேலும் கடவுள் இருப்பதை மறுத்துள்ளார்.இதையெல்லாம் அவர் ட்விட்டரில் பதிவிட்டுள்ளதை போலீஸார் கண்டுபிடித்தனர்.
இதுகுறித்து, துணை மத்திய கிழக்கு மற்றும் வட ஆப்பிரிக்க லாபி மனித உரிமைக் குழு, இயக்குநர் ஜோ ஸ்டோர்க், ‘அரசின் கொள்கைக்கு எதிராக கருத்து தெரிவிப்பதை சவுதிஅதிகாரிகள் ஒருபோதும் பொறுத்துக்கொள்ள மாட்டார்கள். ஆனால் சமீபத்திய சட்டம் மற்றும் விதிமுறைகள் கருத்துரிமையை ஒடுக்கியுள்ளது என்றார். கடந்த 2014ஆம் ஆண்டு, ஜனவரி 31ஆம் தேதி இந்த சர்ச்சைக்குரிய சட்டத்தை மறைந்த மன்னர் அப்துல்லாவால் அறிமுகப்படுத்தப்பட்டது. இதன்பின்னர், பொது ஒழுங்கு சட்டத்தைஎதிர்ப்பவர்களை ஒடுக்குவது உட்பட அனைத்து அரசியல் அதிருப்திகளையும் சமாளிக்க அதிகாரிகளுக்கு அதிகாரம் வழங்கப்பட்டது. நாட்டின் அடிப்படையான இஸ்லாமியக்கொள்கைகளுக்கு எதிராகவோ அல்லது ஒட்டுமொத்தமாக இறைமறுப்புக் கொள்கையையோ பொதுமக்களிடம் பிரச்சாரம் செய்தால் அது கடும் தண்டனைக்குரியது. அவர்கள்தீவிரவாதிகளாகக் கருதப்படுவார்கள் என கூறியுள்ளார். சவுதியில் வெளிப்படையாகவே தங்களை நாத்திகர் என்று அறிவித்துக் கொண்டுள்ளவர்கள் பலபேர் உள்ளனர்.அவர்களில் பெரும்பாலானோர் கல்வி பெற்ற இளைஞர்களாக உள்ளனர். உலகளவில் ‘வின்கேல்லப்’ நிறுவனத்தின் புள்ளிவிவரப்படி, சவுதி அரேபியாவின் மக்கள் தொகையில் 5%மக்கள் நாத்திகர்களாக தங்களை வெளிப்படுத்திக்கொண்டுள்ளனர். அதேபோல், 19% மக்கள் எந்த மதத்தையும் சாராதவர்கள் என்று உறுதிப்படுத்தியுள்ளனர். இந்நிலையில்,இந்தச் சட்டத்தால் அவர்கள் பாதிப்புக்குள்ளாவார்கள் என்பது குறிப்பிடத்தக்கது. கடந்த 2012ஆம் ஆண்டு, ‘ஃப்ரீ சவுதி லிபரல்ஸ்’ என்ற இணையதளத்தை தொடங்கி எழுத்துரிமை, பேச்சுரிமை, கருத்துரிமைகளை வலியுறுத்திய செயல்பாட்டாளர் ரைஃப் பதாவி,தனது எழுத்துகள்மூலம் இணையதளத்தில் இஸ்லாம் மத குருமார்களை நிந்தனை செய்ததாகக் குற்றம்சாட்டப்பட்டு 10 ஆண்டு சிறை மற்றும் 1,000 கசையடிகள் தண்டனையாகப்பெற்றார் என்பது குறிப்பிடத்தக்கது.  மின்னம்பலம்.com

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக