சனி, 3 செப்டம்பர், 2016

சிறுவாணியில் கேரளா அனைகட்டப்பட்டால் ஒரு சொட்டு தண்ணீர் கூட கோவைக்கு வராது?

சிறுவானி ஆற்றின் குறுக்கே கேரளா அணை கட்டுவதை தமிழக விவசாயிகள் எதிர்ப்பது ஏன்?>கேரள மாநிலம் அட்டப்பாடி பள்ளத்தாக்கு பகுதியில் 8387 ஹெக்டர் நிலங்களுக்கு பாசன வசதியை ஏற்படுத்துவதுடன், குடிநீர் மற்றும் மின் திட்டங்களையும் செயல்படுத்துவதற்காக சிறுவானி ஆற்றின் குறுக்க 47 மீட்டர் நீளத்திற்கு தடுப்பணைக்கட்ட முடிவு செய்யப்பட்டிருக்கிறது. இதற்காக 460 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யவும் கேரள அரசு தீர்மானித்திருக்கிறது.இரு மாநிலங்களுக்கு இடையே பாயும் ஆறுகளின் குறுக்க தடுப்பணைக் கட்டவேண்டும் என்றால் கடைமடை பாசனப்பகுதி அமைந்துள்ள மாநிலத்தின் அனுமதி பெறப்படவேண்டும் என்பது விதியாகும். ஆனால், சிறுவானி ஆற்றின் குறுக்கே தடுப்பணைக்கட்ட தமிழக அரசு கடந்த 30 ஆண்டுகளாக எதிர்ப்பு தெரிவித்துவரும் நிலையில் அதை பொருட்படுத்தாமல், புதிய தடுப்பணைக்கட்ட கேரள அரசு முடிவு செய்திருக்கிறது.


உச்சநீதிமன்ற தீர்ப்பை மதிக்காமல் முல்லைப் பெரியாற்று அணையின் நீர்மட்டத்தை உயர்த்த மறுத்துவரும் கேரள அரசு, பவானி மற்றும் பாம்பாற்றின் ஆற்றின் குறுக்கே புதிய அணைகளை கட்ட ஏற்கெனவே திட்டமிட்டிருக்கிறது. தற்போது சிறுவானி ஆற்றின் குறுக்கேயும் தடுப்பணையைக்கட்ட கேரள அரசு முயல்வது தமிழகத்தின் ஆற்றுநீர் உரிமைகளை பறிக்கும் செயலாகும்.

கடந்த 1978-ம் ஆண்டில் எம்.ஜி.ஆர் முதல்வராக இருந்த போது கேரளாவில் கருணாகரன் ஆட்சியில் இருந்தார். அப்போது சிறுவாணி ஆற்றின் குறுக்கே அணை கட்ட தீவிர முயற்சி எடுக்கப்பட்டது. ஆனால் பல போரட்டங்களால் இந்த அணை கட்டும் முயற்சி நிறுத்தப்பட்டது. அப்போது அணை கட்டுவதற்காக கொண்டு வந்த இயந்திரங்கள் மற்றும் வாகனங்கள் துருப்பிடித்து கிடக்கின்றன. பல வருடங்களுக்கு பிறகு 2012 ஆண்டு இந்த பகுதியில் உள்ள மக்களுக்காக இங்கு அணை கட்ட வேண்டும் என்று நடவடிக்கை எடுக்க கேரளா அரசு முயற்சி செய்தது. ஆனால் அப்போதும் தமிழக விவசாயிகள் மற்றும் தமிழகத்தில் உள்ள அனைத்து கட்சியினர் போராட்டம் செய்யவே மீண்டும் கைவிடப்பட்டது.

தற்போது, சிறுவானி ஆறு பவானி ஆற்றில் கலக்கும் இடத்தில் அருகே அணை கட்ட கேரள அரசு முடிவு செய்து அதற்கான திவீர முயற்சியை மேற்கொண்டு வருகிறது.
சுமார் ரூ.900 கோடியில் 51 அடி உயரத்தில் 500 மீட்டர் அகலத்தில் 4650 ஹெக்டேர் பரப்பளவில் இந்த அணை கட்டுவதற்கு ஆய்வு நடப்பதாக கூறப்படுகிறது.;
மத்திய அரசு நீர்பாசன மதிப்பீட்டுக்குழு அனுமதியும் கொடுத்துள்ளதாக கூறப்படுகிறது
இந்த நிலையில் புதிய அணை கட்டுமான பணிகளை கேரள நீர்பாசன துறையை சேர்ந்த டிசைன் அண்டு ரிசர்ச் போர்டு (ஐடிஆர்பி) அணை கட்டும் பகுதியில் சுற்றுச்சூழல் சாதக-பதாகங்கள் குறித்து செய்ய தனியார் நிறுவனத்திடம் பணிகளை ஒப்படைத்துள்ளனர்.
இதனால் கேரள அரசு அதிகாரிகள் இங்கு வந்து ஆய்வு பணியை தொடங்கி உள்ளனர் என்று கூறப்படுகிறது.
மேலும் கடந்த 1978-ம் ஆண்டில் புதிய அணை கட்ட கேரள அரசு முயற்சித்த போது கிடப்பில் வைக்கப்பட்டு இருந்த கான்கிரீட் கலவை எந்திரங்களை மீண்டும் பயன்படுத்துவது குறித்தும் கேரள அரசு அதிகாரிகள் ஆலோசித்து வருகிறார்கள்.
தமிழ்நாட்டின் தொழில்துறை தலைநகரமான கோவை மாநகரம் அதன் குடிநீர் தேவைக்காக சிறுவானி ஆற்று நீரையே நம்பியிருக்கிறது. இந்த அணைக் கட்டப்பட்டால் சிறுவானி ஆற்றில் இருந்து ஒரு சொட்டு நீர் கூட தமிழகத்திற்கு வராது. இதனால் கோவை, ஈரோடு, திருப்பூர் மாவட்டங்களில் குடிநீர் வினியோகம் கடுமையாக பாதிக்கப்படும். கொங்கு மண்டலத்தின் விவசாயம், மற்றும் பொது மக்களின் குடிநீர் ஆதாரம் அடியோடு பாதிக்கும் சூழ்நிலை உள்ளது.
இதனால் அணை கட்ட எதிர்ப்பு தெரிவித்து பல்வேறு விவசாய சங்கத்தினர், அரசியல் கட்சியினர் போராட்டம் நடத்தி வருகிறார்கள். தற்போது விவசாயிகள், அரசியல் கட்சியினரின் போராட்டம் வலுப்பெற்று வருகிறது.நக்கீரன்,இன்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக