திங்கள், 8 ஆகஸ்ட், 2016

சசிகலா புஷ்பா மீது 7 கொலை குற்றங்கள் , குடும்பத்தினர் மீது பாலியல் பலாத்காரம், மணல் திருட்டு ! .... அப்ப கஞ்சா கேசு?

சென்னை: அதிமுகவில் இருந்து நீக்கப்பட்ட சசிகலா புஷ்பா எம்.பி மீது அடுக்கடுக்கான புகார்கள் குவிந்து வருவதால் விரைவில் அவர் கைது செய்யப்படலாம் என தகவல்கள் உலா வருகின்றன. அதோடு, இன்று சசிகலா புஷ்பா மற்றும் அவரது குடும்பத்தார் சேர்ந்து 7 கொலைகள் செய்ததாகவும் பேஸ்புக்கில் செய்தி பரவி வருகிறது.
முதல்வர் ஜெயலலிதா மீது சசிகலா புஷ்பா எம்.பி. பகிரங்கமாக ராஜ்யசபாவில் புகார் கூறியதைத் தொடர்ந்து தற்போது சசிகலா புஷ்பா மற்றும் குடும்பத்தினர் மீது சரமாரியாக புகார்கள் கிளம்பி வருகின்றன. முதலில் அவரது கணவர் மீது பண மோசடி புகார் எழுந்தது. இதையடுத்து கணவர் லிங்கேஸ்வர திலகனும், அவரது மகனும் முன்ஜாமீன் கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு செய்தனர்.
இந்த நிலையில் சசிகலா புஷ்பாவின் கணவர் மற்றும் மகன் மீது இன்று அவர்களது வீட்டில் வேலை பார்த்த பானுமதி என்ற பெண்ணும் அவரது சகோதரி ஜான்சிராணி என்பவரும் தூத்துக்குடி எஸ்.பியிடம் பாலியல் புகார் கூறியிருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.    என்னாமோ அசிட் அடிக்காதவரைக்கும் புண்ணியம்னு நெனைச்சுக்குங்க.... 


இந்தப் புகாரில் சசிகலா புஷ்பா தன்னை அடித்து உதைத்ததாகவும், அவரது கணவரும், மகனும் தனக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாகவும் பானுமதி குறிப்பிட்டிருப்பதாகக் கூறப்பட்டது

ஆனால், இது மட்டுமின்றி பானுமதியின் புகாரில் மேலும் பல பரபரப்புத் தகவல்கள் அடங்கியுள்ளதாகவும் பேஸ்புக் உள்ளிட்ட சமூகவலைதளப் பக்கங்களில் தகவல்கள் பரவி வருகின்றன.
இந்த விவகாரத்தில் முன்னாள் அமைச்சர் ஒருவரின் பெயரும் அடிபடுவதாகவும் பரபரப்பாக பேசப்படுகிறது. விரைவில் அவர் மீதும் வெளிப்படையான புகார்கள் குவியும் எனக் கூறப்படுகிறது.
இந்த பாலியல் புகாரோடு சேர்த்து இதுவரை சசிகலா புஷ்பா மீது நான்கு வழக்குகள் பதிவாகியுள்ளன. தொடர்ந்து அடுத்தடுத்து புகார்கள் குவிந்து வருவதால் விரைவில் அவர் கைது செய்யப்படலாம் என்றும் அரசியல் வட்டாரத் தகவல்கள் தெரிவிக்கின்றன

Read more at:tamil.oneindia.com/

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக