புதன், 10 ஆகஸ்ட், 2016

ஈஷா யோகா மையத்தில் கோவை மாவட்ட நீதிபதி ஆய்வு

கோவையை சேர்ந்த சத்தியஜோதி என்பவர் சென்னை ஐகோர்ட்டில் ஆட்கொணர்வு மனு தாக்கல் செய்திருந்தார். அந்த மனுவில், ஈஷா யோகா மையத்துக்கு சென்று வந்த தனது மகள்கள் லதா, கீதா ஆகியோர் திடீரென அவர்கள் அங்கேயே தங்கத் தொடங்கியதாகவும், சட்டவிரோதமாக ஈஷா யோகா மையத்தில் பிடித்து வைத்துள்ள அவர்களை கோர்ட்டில் ஆஜர்படுத்த கோவை போலீசாருக்கு உத்தரவிடவேண்டும் என்றும் கூறியிருந்தார். இந்த மனுவை விசாரித்த நீதிபதிகள் எஸ்.நாகமுத்து, வி.பாரதிதாசன், சம்பந்தப்பட்ட பெண்களிடம் கோவை மாவட்ட முதன்மை நீதிபதி விசாரணை நடத்தி அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என உத்தரவிட்டனர்.நமக்கென்னவோ இந்த ஆய்வு மேலே நம்பிக்கை இல்லை ! அதிகார வர்க்கம்  ஜாக்கியின் பணத்துக்கு விலை போய்விடும்  என்றே தோன்றுகிறது . பட்டபகலில்இவ்வளவுஅநியாயத்தையும்   இந்த ஜாக்கி செய்திருக்கிரான் என்றால் இவர்களுக்கு  தெரியாமல்  இது நடந்திருக்குமா ?   இப்போது  கொஞ்சம்  வெளிச்சத்துக்கு   வந்துவிட்டதால்   எதாவது   செய்ய வேண்டிய    கட்டாயத்தில்  உள்ளார்கள் .  பொறுத்திருந்து  பார்ப்போம்


‘ஈஷா யோகா மையத்தில் கோவை மாவட்ட முதன்மை நீதிபதி, ஈஷா யோகா மைத்துக்கு இன்று பிற்பகல் 3 மணிக்குள் செல்லவேண்டும். அவருடன் கோவை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டும் செல்லவேண்டும். ஈஷா மையத்தில் வேறு சில பெண்களும் சட்டவிரோதமாக அடைக்கப்பட்டுள்ளதாக, சில போலீஸ் நிலையங்களில் புகார் செய்யப்பட்டுள்ளதாக தெரிகிறது. அந்த போலீஸ் நிலையங்களின் இன்ஸ்பெக்டர்களும் இவர்களுடன் செல்ல வேண்டும்.

சம்பந்தப்பட்ட பெண்கள் சொந்த விருப்பத்தின் பேரில்தான் அங்கு தங்கியிருக்கிறார்களா? அல்லது யாராவது கட்டாயப்படுத்தி சட்டவிரோதமாக பிடித்து வைத்துள்ளனரா? உள்ளிட்டவை குறித்து அவர்களிடம் கேள்வி கேட்டு, அவர்கள் கூறும் பதில்களை, விரிவான அறிக்கையாக கோவை மாவட்ட நீதிபதி, இந்த ஐகோர்ட்டுக்கு தாக்கல் செய்யவேண்டும். இந்த வழக்கு விசாரணையை நாளை (வியாழக்கிழமை) விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்படும்’ என்று நீதிபதிகள் தெரிவித்தனர்.

இதையடுத்து கோவை மாவட்ட முதன்மை நீதிபதி பொங்கியப்பன், மாவட்ட எஸ்.பி. ரம்யாபாரதி மற்றும் சட்ட ஆணைய நிர்வாகி ஆகியோர் இன்று பிற்பகல் ஈஷா யோகா மையத்துக்கு சென்றனர். அங்கு சத்தியஜோதியின் இரண்டு மகள்களிடமும் விசாரணை நடத்தப்பட்டது. அந்த பெண்கள் அவர்களின் சொந்த விருப்பத்தின் பேரில்தான் அங்கு தங்கியிருக்கிறார்களா? அல்லது கட்டாயப்படுத்தி தங்க வைக்கப்பட்டார்களா? என்று நீதிபதி கேட்டார். இதற்கு அந்த பெண்கள் தெரிவித்த கருத்தினை பதிவு செய்துகொண்டார்.

விசாரணை முடிந்ததும் ஐகோர்ட்டில் அறிக்கை தாக்கல் செய்யப்பட உள்ளது.  மாலைமலர்.கம

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக