புதன், 10 ஆகஸ்ட், 2016

அவசரமாக சசிகலா புஷ்பாவை நீக்கி விட்டோம் என கடிதம் கொடுத்து பின்பு அவசரம் அவசரமாக திரும்ப பெற்ற அதிமேதாவிகள்

ராஜ்யசபா எம்.பி., சசிகலா புஷ்பா, அ.தி.மு.க., விலிருந்து நீக்கப்பட்டு விட்டாலும், அதுகுறித்த அதிகாரப்பூர்வமான கடிதம், ராஜ்யசபா செயலகத் திற்கு தரப்படவில்லை.
இந்நிலையில், சசிகலாபுஷ்பாவை கட்சியி லிருந்து நீக்கிவிட்டதாக கூறி, அ.தி.மு.க., -எம்.பி., ஒருவர், அவசரப்பட்டு ராஜ்யசபா செயலகத்தில் கடிதம் கொடுத்து, பின், அதை திரும்ப பெற்ற சம்பவம் அரங்கேறி உள்ளது.    மம்மி தலைகீழா நின்னு தண்ணி குடிச்சாலும், மண்டை காஞ்சி கத்தினாலும் சரி.. சசிகலா புஷ்பம் ராஜ்யசபா எம்.பி என்பதை மாற்ற முடியாது.  .கஞ்சா மற்றும் போதை மிகு அபின் வைத்து வழக்கமாக உபயோகித்தார் என்று சொல்ல ஒருவரும் கிடைக்கவில்லையா? bogusvotescmக்கு இன்னும்  சந்திரலேகா அசிட் கூட கிடைக்கல்லியா? 


ராஜ்யசபா செயலக வட்டாரங்கள் கூறிய தாவது:முன்னெப்போதும் இல்லாத வகையில், இந்த மழைக்கால கூட்டத் தொடருக்கு முன், புதிய எம்.பி.,க்கள் அதிகம் பேர் பதவியேற்றனர். இதனால், அவர்களுக்கு ஏற்ற வகையில், ராஜ்யசபாவுக்குள் இருக்கைகளில் மாற்றம் செய்ய முடிவெடுக்கப்பட்டது.

ஒவ்வொரு கட்சியிடமும், அதன் தலைவர், துணைத் தலைவர், கொறடா உட்பட, முக்கிய பொறுப்புகளில் உள்ளவர்கள் மற்றும் சீனியா ரிட்டிக்கு ஏற்ப எம்.பி.,க்களின் வரிசைப் பட்டி யலை அளிக்கும்படி, ராஜ்யசபா செயலகம் கேட்டிருந்தது.அ.தி.மு.க.,வில்
புதிய எம்.பி.,க் கள் நான்கு பேர் பதவியேற்றனர். அதற்கேற்ற வகையில், இருக்கை எண்களை ஒதுக்க வேண்டு மென்பதால், அ.தி.மு.க.,வின் பட்டியலுக்காக, ராஜ்யசபா செயலகம் காத்து இருந்தது. மற்ற கட்சிகள் அனைத்தும், உரிய காலத்திற்குள் பட்டியலை அளித்தன. அ.தி.மு.க., சார்பில் மட்டும், பட்டியல் அளிப்பதில் தாமதம் ஏற்பட்டது.

இதையடுத்து,அ.தி.மு.க.,வுக்காக காத்திருக்காமல், இருக்கை எண்களை, சபை முழுவதும் அதிகாரிகள் ஒதுக்கிவிட்டனர். கூட்டத்தொடர் துவங்கி பல நாட்கள் கழித்து, ஒருவழியாக அ.தி.மு.க., வின் புதிய பட்டியல், அதிகாரிகளுக்கு வந்து சேர்ந்தது. ஆனால், அடுத்த சில நாட்களில், சசிகலா புஷ்பா விவகாரம் வெடித்து, கட்சியிலிருந்து நீக்கப்பட்டார்.

ஆனால், சசிகலா புஷ்பா நீக்கப்பட்டது தொடர்பான அதிகாரப்பூர்வ கடிதம், ராஜ்யசபா செயலகத்திற்கு அளிக்கப்படவில்லை. அப்படி அறிவித்தால், அது, சசிகலா புஷ்பாவுக்கு சாதகமாக அமையும் என்ப தாலும், சபையில், கட்சியின் கொறடா உத்தரவுக்கு கட்டுப்படாமல், சுதந்திரமாக அவர் செயல்பட முடியும் என்பதாலும், அந்த கடிதத்தை கொடுக்கா மல், அ.தி.மு.க., மேலிடம் தாமதித்து வருகிறது.

இந்நிலையில், பார்லிமென்ட் அ.தி.மு.க., குழுவின் முக்கிய பொறுப்பில் உள்ள, அந்தகட்சியின் எம்.பி., ஒருவர் அவசரக்குடுக்கை யாக, ஒரு காரியம் செய்தார்.
'சசிகலா புஷ்பா, கட்சியிலிருந்து நீக்கப் பட்டு விட்டார்' என, குறிப்பிட்டு, இது தொடர்பாக, இருக்கை எண் பட்டியலில் திருத்தமும் கோரி, அதிகாரப் பூர்வமாக கடிதத்தை, அவர் ராஜ்யசபா செயலகத்தில் அளித்துவிட்டார்.'கட்சி தலைமையே அமைதி காக்கும் போது,
சசிகலா புஷ்பாவை நீக்கிவிட்டதாக, இவரா கவே கடிதம் தருகிறாரே' என, அதிகாரிகளுக்கு சந்தேகம் வர, இதுகுறித்து, மூத்த எம்.பி.,க்கள் சிலரது கவனத்திற்கு இந்த விஷயம் சென்ற போது, அவர்கள் அதிர்ந்து விட்டனர்.

சம்பந்தப்பட்ட எம்.பி.,யை அழைத்து கடிந்து கொண்ட மூத்த எம்.பி.,க்கள், 'அம்மா உத்தரவு
இல்லாமல், கடிதம் தந்தது தவறு; முக்கிய பிரச்னையில், முந்திரிக் கொட்டை தனமாக நடந்து கொள்ளக்கூடாது' என, அறிவுறுத்தினர். ராஜ்யசபா செயலகத்தில், அந்த எம்.பி., அளித்த கடிதத்தை, உடனடியாக வாங்கி வரச் செய்து, சுக்குநுாறாக கிழித்துப் போட்ட பின்பே, அனைவரும் நிம்மதிப் பெருமூச்சு விட்டனர்.

இந்த கடிதம் ஏற்கப்பட்டிருந்தால், அது, சசிகலா புஷ்பாவுக்கு சாதகமாக இருந்திருக்கும் என்பதே, இதற்கு காரணம்.இவ்வாறு அந்த வட்டாரங்கள் தெரிவித்தன.

- நமது டில்லி நிருபர் -  தினமலர்.கம

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக