புதன், 24 ஆகஸ்ட், 2016

தலாக் தலாக் தலாக் விவாகரத்தை எதிர்க்கும் வழக்கு சுப்ரீம் கோர்ட் விசாரிக்கிறது

புதுடில்லி : மூன்று முறை, 'தலாக்' என கூறி, விவாகரத்து செய்யும் நடைமுறையை எதிர்த்து, மேற்கு வங்கத்தைச் சேர்ந்த பெண் தாக்கல் செய்துள்ள வழக்கை, சுப்ரீம் கோர்ட் விசாரணைக்கு ஏற்றது. மூன்று முறை, 'தலாக்' எனக் கூறி, விவாகரத்து பெற்றுக் கொள்ளும் முறையை எதிர்த்து, சுப்ரீம் கோர்ட்டில் ஏற்கனவே பல்வேறு வழக்குகள் தொடரப்பட்டுள்ளன. இது குறித்து பதிலளிக்கும்படி, அனைத்திந்திய முஸ்லிம் தனிநபர் சட்ட வாரியம் உள்ளிட்டோருக்கு, தலைமை நீதிபதி, டி.எஸ்.தாக்கூர் தலைமையிலான அமர்வு, 'நோட்டீஸ்' அனுப்பிஉள்ளது. இதற்கிடையே, மேற்கு வங்கத்தைச் சேர்ந்த இஷ்ரத் ஜகான் என்ற பெண் தாக்கல் செய்துள்ள மனு, நீதிபதிகள், அனில் தவே, எல்.நாகேஸ்வர ராவ் ஆகியோர் அடங்கிய சுப்ரீம் கோர்ட் அமர்வு முன், நேற்று விசாரணைக்கு வந்தது. இந்த மனுவை விசாரணைக்கு ஏற்ற அமர்வு, வரும் வெள்ளிக்கிழமை விசாரிப்பதாக கூறியுள்ளது.    கதிரழகன், SSLC - சிவகங்கை, TN,இந்தியா :ஷா பானு ன்னு ஒரு அம்மா. நிக்காஹ் முடிஞ்சி 25 வருசம் கழிச்சு தலாக்கு சொல்லிட்டாரு அவுக்க புருசன். அலகாபாது ஐ கோர்ட்டு மாசம் கேவலம் 25 ரூ ஜீவனாம்சம் குடுத்திச்சு. பொத்துக்கிட்டு வந்திடுச்சு இந்த அரபிகளுக்கு கோவம். முடியவே முடியாது, தலாக்கான ஆனா அந்தம்மா வக்பு போர்டு போடற பிச்சையில தான் வாழணும் ன்னு போராட்டம். ஜீவனாம்சம் குடுத்தா இந்த பொம்பளைங்க ரொம்ப துள்ளுவாங்க இது ஷரி-ஆஹ் க்கு எதிர் ஆச்சா போச்சா ன்னு கத்தி குய்யோ முறையோன்னு கூக்குரல் எளுப்பி அவசர சட்டம் பொட்டாக முசுலீம் பெண்களுக்கு ஜீவனாம்சம் கெடையாதுனுட்டு. இந்த மார்க்ககாரங்க போராடுவாங்க. ஆண் ஆதிக்கம் ரொம்ப முக்கியம் அவுங்களுக்கு.



மனுவில் இஷ்ரத் ஜகான் கூறியுள்ளதாவது: என் கணவர், தொலைபேசியில், மூன்று முறை தலாக் கூறி விவாகரத்து பெற்றுள்ளதாக அறிவித்து விட்டார். ஏழு முதல், 12 வயதுள்ள என் மூன்று மகள்கள் மற்றும் ஒரு மகனை, தன் கட்டுப்பாட்டில் அவர் வைத்து உள்ளார். முஸ்லிம் தனிநபர் சட்டத்தின் இந்த விவாகரத்து முறையால், என்னைப் போல, நாடு முழுவதும் பல பெண்களும், குழந்தைகளும் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்தச் சட்டப் பிரிவு செல்லாது என்று அறிவிக்க வேண்டும்.

தனிநபர் சட்டம், அரசியலமைப்பு சட்டத்துக்கு எதிரானது என்றும் அறிவிக்க வேண்டும். என் கணவர் தொலை பேசியில் மூன்று முறை தலாக் என்று கூறி பெற்ற விவாகரத்து செல்லாது என்று அறிவிப்பதுடன், எனக்கும், என் குழந்தைகளுக்கும் பாதுகாப்பு அளிக்க வேண்டும்.இவ்வாறு அந்த மனுவில் கூறப்பட்டுள்ளது.  தினமலர்.com

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக