வியாழன், 18 ஆகஸ்ட், 2016

திருச்சி : தடையை மீறி நீதித்துறை சர்வாதிகாரத்துக்கு எதிரான போராட்டம்

இது ஜனநாயக நாடு மக்களுக்கான எல்லா உரிமைகளும் உள்ளது என வாய்க்கிழிய பேசுகின்றனர். ஆனால் சாதாரண பேச்சுரிமை, கருத்துரிமை கூட கிடையாது. நம் உரிமைக்காக நாம் போராடுவதே மிகப்பெரிய குற்றம் என்கின்றனர். இதில் நேரடியாக நீதிமன்றமே தலையிடுகிறது.
peoples-power-trichy-rally-05ழக்கறிஞர்கள் போதையில் திரிகிறார்கள், நீதிபதியிடம் கைநீட்டி பேசுகிறார்கள், சத்தம் போட்டு வாதாடுகிறார்கள், கண் புருவத்தை உயர்த்தி பார்க்கிறார்கள்’ என தலைமை நீதியரசர்கள் ஒன்று கூடி தனிச்சட்டம் போட்டு அனைத்து வழக்கறிஞர்களின் உரிமையை பறிக்க முயல்வதை எதிர்த்து கடந்த இரு மாத காலத்திற்கும் மேலாக தமிழகம் முழுவதும் வழக்கறிஞர்கள் பல்வேறு வகையான போரட்டங்களை நடத்தி வருகிறார்கள்..

கடந்த கால வரலாற்றில் தமிழகம் மற்றும் இந்தியா முழுவதும் இந்த நீதியரசர்கள் வழங்கியுள்ள அநீதியான தீர்ப்புகளும், வழக்கை தள்ளி வைத்தே மக்களின் தாலி அறுத்த கதைகளும் வழிநெடுக உள்ளன. கும்பகோணம் தீ விபத்தில் கருகிய மழலை மொட்டுகளுக்கு இதுவரை நீதி இல்லை, கிரானைட் மணல் கொள்ளைக்கு இதுவரை நீதி இல்லை.
சமூக நீதிக்கு வேட்டு வைக்கும் இந்த அநீதியரசர்கள் கையில் ஏற்கனவே வரம்புக்கு மீறி அதிகாரம் உள்ளது. ஒரு மாநில முதல்வரை விட உயர்நீதிமன்ற நீதிபதிக்கு அதீத அதிகாரம் உள்ளதை நாடே அறியும்.
இந்த லட்சணத்தில் கருப்பு போக்கிரிகளை எதிர்த்து பேச கருப்பு காளைகளான வழக்கறிஞர்களுக்கு தான் ஓரளவு உரிமை உள்ளது. அதனையும் பறிக்கும் வகையில் தனிச்சட்டம் போட்டு பறிப்பதை இனியும் அனுமதிப்பது ஆபத்தானது. ஏனெனில் இது வழக்கறிஞர் நீதிபதிகளுக்கான பிரச்சனை மட்டுமல்ல, மக்களின் பிரச்சனையாகும். இச்சட்ட திருத்தம் ஒட்டுமொத்த அதிகாரத்தையும் நீதிபதிகள் கையில் கொடுத்து சுதந்திரமான சர்வாதிகாரியாய் வலம் வரச்செய்யவே உதவும். இந்த மோசமான நடவடிக்கயை எந்த ஓட்டு கட்சிகளும் கேட்க துணிவில்லாத இந்த சூழலில் மக்கள் அதிகாரம் களத்தில் இறங்கி தமிழகம் மற்றும் பாண்டிச்சேரி என மாநிலம் தழுவிய பிரச்சார இயக்கமாக முன்னெடுத்து திருச்சியில் 12-08-2016 அன்று பொதுக்கூட்டம் நடத்த முடிவு செய்யப்பட்டது.
peoples-power-trichy-rally-17அதனடிப்படையில் “நீதிபதிகள் ஆண்டைகளா? அவர்களின் அடிமைகளாக நாம்?” என்ற முழக்கத்தை மையமாக வைத்து இயக்கத்தை துவங்கினோம். இதன் மூலம் இதுவரையிலும் முதலாளித்துவ ஊடகங்களால் யோக்கியர்கள், மாண்பிற்குரியவர்கள் என்று போற்றப்பட்டு வந்த நீதியரசர்களின் பித்தலாட்டங்களும், ஆண்டைத்தனமும் லட்சக்கணக்கான மக்களின் மத்தியில் அம்பலப்பட்டு நின்றது.
நாம் பிரச்சாரத்தை துவங்கிய நாள் முதல் இந்த பொதுக்கூட்டதிற்கான இடத்தின் அனுமதியை பெற காவல்துறையிடம் பட்ட பாடு பெரும்பாடாகும். முதலில் புத்தூர் நான்கு வழிச்சாலையில் கூட்டம் நடத்த மாநகர காவல் துறையிடம் அனுமதி கேட்டோம், ஆனால் அவர்கள் அங்கு நடத்த அனுமதி மறுத்தனர். தீவிரமான 8 நாடகள் விவாதத்திற்கு பிறகு தான் பஞ்சவர்ணசாமி கோயில் தெருவில், உரிய நாளில் நடத்த அனுமதி தரப்பட்டது.
காவல்துறை ஆணையர் அலுவலகமே ஒரு வார காலமாக இந்த ஒற்றை கோரிக்கையை திரும்ப திரும்ப கூடி மக்கள் அதிகாரத்தின் பொதுக்கூட்டத்தை எப்படி முடக்குவது என்று கூட்டம் போட்டு பரிசீலித்தார்களாம்,. அவர்கள் கூடியது போதாது என்று நம்மையும் கூப்பிட்டு அவர்கள் போட்ட அலப்பறை கொஞ்ச நஞ்சமல்ல. ஏட்டையா துவங்கி மாநகர காவல்துறை ஆணையர் வரை அனைவரும் சொன்ன பதில் ”எங்களுக்கு மேலே உள்ளவர்கள் தான் செய்வார்கள். இது நீதி துறைக்கு எதிரான பிரச்சனை இதில் உங்களுக்கு அனுமதி தந்தா எங்களுக்குத்தான் தலை உருளும். ஆகவே கூட்டத்தை ரத்து செய்யுங்க, இடத்தை மாத்துங்க, பத்து நிமிடம் பேசுங்க, பேசாம கைதாகுங்க, நான்கு இடத்துல கைதாகுங்க” என நமது விவாதத்தின் பதில்களுக்கு மாற்றி மாற்றி பேசினர். ஆனால் நாம் பொதுக்கூட்டத்தை திட்டமிட்ட நாளன்று திட்டமிட்ட இடத்தில் நடத்தவே முடிவு செய்தோம் .
peoples-power-trichy-rally-12காவல் துறையின் அணுகுமுறை ‘அனுமதி வழங்கினால் அது நீதிமன்ற அவமதிப்பாகிவிடும்’ என்ற வகையில் தான் இருந்தது, ஆனால் அதை அவர்கள் நம்மிடம் சொல்லிக்கொள்ளவில்லை. மேலும், நீதிமன்றமே நேரடியாக தலையிட்டு பொதுக்கூட்டத்தை நடத்த விடவேக்கூடாது என காவல்துறையினரை எச்சரித்துள்ளது. இதை காவல் துறையினரே நம்மிடம் வலிந்து கூறினர்.
மேலும் கூட்டம் நடத்துவதை பற்றி மறு பரிசீலனை செய்ய மேலதிகாரிகளுடன் பேச திட்டமிடப்பட்டது. ஆனால் நாம் நமது திட்டத்தில் உறுதியாகவே இருந்தோம். எப்படியாவது காவல்துறையினர் பொதுக்கூட்டத்தை ரத்து செய்துவிட வேண்டுமென்று விடாப்பிடியாக திரிந்தனர். அந்த வகையில் முதலில் பொதுக்கூட்டதில் பேசவுள்ள பேச்சாளர்களின் தகவல்களை மட்டும் கேட்டறிந்த காவல் துறை, பிற்பாடு 32 கேள்விகள் அடங்கிய ஒரு கோப்பினை கொடுத்து அதற்கு பதில் அளிக்கச் சொன்னது. அதில் பொதுக்கூட்டத்திற்கு கலந்து கொள்ள வரும் அனைத்து தோழர்களின் பெயர், முகவரியை இணைக்குமாறு குறிப்பிட்டு இருந்தது. அதற்கு நாம் பதில் அளிக்க மறுத்தோம்.
அதையே காரணம்காட்டி பொதுக்கூட்டத்திற்கு முந்தைய நாளான 11-08-2016 அன்று அலைபேசியில் தொடர்பு கொண்டு, கூட்டத்திற்கான அனுமதி ரத்து என காவல் துறை அறிவித்தது. கமிஷனரிடம் பேச்சுவார்த்தை நடத்தியும் பலனில்லை.
peoples-power-trichy-rally-press-meet-2இது ஜனநாயக நாடு மக்களுக்கான எல்லா உரிமைகளும் உள்ளது என வாய்க்கிழிய பேசுகின்றனர். ஆனால் சாதாரண பேச்சுரிமை, கருத்துரிமை கூட கிடையாது. நம் உரிமைக்காக நாம் போராடுவதே மிகப்பெரிய குற்றம் என்கின்றனர். இதில் நேரடியாக நீதிமன்றமே தலை இடுகிறது என்றால் இப்படிபட்ட நீதிபதிகள் கையில் மொத்த அதிகாரமும் போனால் மக்களின் நிலை என்பது மிக மோசமான நிலைக்கு போய்விடும் என்பதில் சந்தேகமில்லை. இதனால் சொந்த நாட்டிலேயே அடிமைகளாக வாழவேண்டிய சூழல் தான் ஏற்படும்.
அந்த வகையில் தான், உடனே நாம் பத்திரிக்கையாளர் சந்திப்பு நடத்தினோம் அதில் காவல்துறையினரின் நடவடிக்கையை கண்டித்தும், திட்டமிட்ட நாளில் திட்டமிட்ட இடத்தில் கூடி பொதுக்கூட்டம் நடத்தப்படும் என பத்திரிகைகளுக்கு பேட்டியளித்தோம், இதில் மக்கள் அதிகாரம் மாநில ஒருங்கிணைப்பாளர் தோழர் ராஜூ பேட்டி அளித்தார்.
உடனே காவல் துறையினர் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக தமிழகம் முழுவதும் பல்வேறு பகுதிகளில் தோழர்களை கைது செய்தனர். மேலும் பொதுக்கூட்டம் நடத்த அனுமதி இல்லையென்றும் மீறினால் கைது செய்வோம் என்றும் மிரட்டினர். இந்த மிரட்டலுக்கு அஞ்சாமல் அனைவரும் ஒன்றுகூடி திட்டமிட்ட இடத்தில் ஆர்ப்பாட்டம் நடத்துவது என முடிவு செய்தோம். அதற்கு முன்பே காவல்துறையினர் பெருமளவு குவிக்கப்பட்டிருந்தனர். கூடிய மக்கள் அதிகாரம் தோழர்கள் எதிர்ப்புற சாலையில் கூடி பறை முழக்கத்தோடு பேரணியாக சென்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
[படங்களைப் பெரிதாகப் பார்க்க அவற்றின் மீது அழுத்தவும்]
ஆயிரக்கணக்கில் நம் தோழர்கள் இருந்ததால் காவல்துறையால் கட்டுப்படுத்த முடியவில்லை. அப்போது மக்கள் அதிகார மாநில ஒருங்கிணைப்பாளர் தோழர் ராஜு மக்கள் மத்தியில் பேச ஆரம்பித்தார். காவல்துறையினர் முடித்துக்கொள்ளுங்கள் என்று தொந்தரவு செய்து கொண்டே இருந்தனர். பத்திரிகைகளுக்கு தோழர் ராஜு பேட்டி கொடுத்ததை தொடர்ந்து நீதிபதிகளுக்கு எதிராகவும், வழக்கறிஞர்களுக்கு ஆதரவு தெரிவித்தும் முழக்கமிட்டுகொண்டே கைதானோம். நான்கு மண்டபங்களில் தனிதனியாக தோழர்களை அடைத்து வைத்தனர். இதில் மொத்தமாக 900 தோழர்கள் கைதாகி இருந்தனர். முன்னெச்சரிக்கை நடவடிக்கை கைதையும் சேர்த்தால் 1050 அளவில் தோழர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
[படங்களைப் பெரிதாகப் பார்க்க அவற்றின் மீது அழுத்தவும்]
ஒவ்வொரு மண்டபத்திற்கும் பொறுப்பாளர்களை நியமித்து அரங்கு கூட்டம் நடத்தப்பட்டது. நிகழ்ச்சியின் கூட்டத்தில் ஒட்டுமொத்தமாக சமூக அமைப்பு எவ்வாறு செயலிழந்து இருக்கிறதென்றும், அதன் ஒரு பகுதியான நீதிமன்றம் எந்த வகையில் மக்களுக்கு எதிராக உள்ளதென்றும், நீதிபதிகளின் சர்வாதிகாரத்தன்மையை அம்பலப்படுத்தியும், வழக்கறிஞர் பிரச்சனை மக்களுக்கான பிரச்சனை என்றும் இன்னும் போராட்டத்தை தீவிரமாக நடத்த வேண்டுமென்பதையும் மையமாக பேசினர். நிகழ்ச்சிகளினூடே ம.க.இ.க மையக்கலை குழுவினரால் வழக்கறிஞர் போரட்டத்தை ஆதரித்து பாடல்கள் பாடப்பட்டன. அதில் ”தமிழக வழக்கறிஞர் போராட்டம் வெல்க” ”உஸ்ஸ்சு… ஜட்ஜூ…. வர்றாரு… உஸ்ஸ்சு…” என்ற புதிய பாடல்களை வழக்கறிஞர்களுக்கு ஆதரவாக தோழர் கோவன் அவர்கள் பாடினார். சில மண்டபங்களில் சென்னை தோழர்களும் புரட்சிகர பாடல்களை பாடினர்.

[படங்களைப் பெரிதாகப் பார்க்க அவற்றின் மீது அழுத்தவும்]
மேலும் பொதுக்கூட்டத்தில் பேசுவதாக இருந்த சி.பி.ஐ வழக்கறிஞர் சிவா, நாம் தமிழர்கட்சி மாவட்ட செயலாளர் பிரபு, தமிழக விவசாயிகள் சங்கத் தலைவர் ம.பா.சின்னத்துரை ஆகியோர் பேசினர். இறுதியாக போராட்டம் செய்து கொண்டு இருக்கும் வழக்கறிஞர்கள், மக்கள் உரிமை பாதுகாப்பு மையம் வழக்கறிஞர் வாஞ்சிநாதன் தலைமையில் அனைத்து மண்டபத்திலும் வந்து நம் தோழர்களிடம் பேசினர். மேலும் வழக்கறிஞர்கள் பிரச்சனையை தமிழகம் முழுவதும் கொண்டு சென்று அதற்காக போரடிகொண்டிருப்பதற்கு மக்கள் அதிகாரத்திற்கும், புரட்சிகரஅமைப்புகளுக்கும் நன்றி தெரிவித்தும், தொடர்ந்து ஆதரவு தரவேண்டுமெனவும் கேட்டுக்கொண்டனர்.
தகவல்:
மக்கள் அதிகாரம்,
திருச்சி.  vinavu.com

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக