வியாழன், 18 ஆகஸ்ட், 2016

அதிமுக தேசத்தொண்டர்கள் போயசுக்கு குமாரசாமி பாணி கணக்கு? பின்னே அம்மாவுக்கு ஆத்திரம் வராதா?

சபைக்கு வெளியே அத்தனை அமளிதுமளி நடந்துகொண்டிருந்தபோது முதலமைச்சர் ஜெயலலிதா சபைக்குள்தான் இருந்தார். அவருக்கும் இதுபற்றிய தகவல்கள் சொல்லப்பட்டிருக்கிறது. தர்ணாவில் ஈடுபட்டிருக்கும் திமுக எம்எல்ஏ.க்களை கைது செய்யலாமா எனவும் அனுமதி கேட்கப்பட்டிருக்கிறது. 'நோ..' எனச் சொல்லிவிட்டாராம் முதல்வர். கைது நடவடிக்கை என்று போனால் அது திமுக-வுக்கு சாதகமாகவும், மக்களிடம் சிம்பதியும் உண்டாக்கிவிடும். இதைவைத்தே திரும்ப அரசியல் செய்வார்கள். அதனால் நடடிக்கை எதுவும் வேண்டாம் என முதல்வர் நினைத்ததாகச் சொல்கிறார்கள்’ என்பதுதான் அந்த மெசேஜ்.
ஃபேஸ்புக் ஸ்டேட்டஸும் தயாராக இருந்தது.
‘மீண்டும் அதிமுக-வில் ‘புஷ்பா’ புயல் வீசத் தொடங்கியிருக்கிறது. இரண்டு மாவட்டச் செயலாளர்கள் தொடங்கி, நிர்வாகிகள் பலரை தூக்கி வீசியிருக்கிறது புஷ்பா புயல். ஜெயலலிதாபற்றி பகிரங்கமாக புகார்களைச் சொல்ல ஆரம்பித்தார் அதிமுக எம்.பி.யான சசிகலா புஷ்பா.


உடனடியாக, அவரை கட்சியிலிருந்து நீக்கினார் ஜெயலலிதா. ஆனாலும், ஜெயலலிதாவின் கோபம் குறையவில்லை. சசிகலா புஷ்பாமீது தமிழகத்தில் பல பகுதிகளில் இருந்தும் அடுத்தடுத்து புகார்கள் கிளம்பிவந்தன. சசிகலா புஷ்பா உள்ளிட்ட அவரது குடும்பத்தினர் அனைவர்மீதும் ஜாமீனில் வெளிவர முடியாத பிரிவுகளில் வழக்கு பதிவு செய்யப்பட்டது. இந்தச் சூழ்நிலையில், டெல்லி உயர்நீதிமன்றத்தில் ஜாமீன் கேட்டு மனுச் செய்தனர் புஷ்பா குடும்பத்தினர். 22ஆம் தேதி வரை புஷ்பா குடும்பத்தினரை கைது செய்யக் கூடாது என்றும், அதற்குள் தூத்துக்குடி நீதிமன்றத்தில் ஆஜராகி முன்ஜாமீன் வாங்கிக்கொள்ள வேண்டும் எனவும் நீதிமன்றம் உத்தரவிட்டது. 22ஆம் தேதி சசிகலா புஷ்பா தூத்துக்குடி நீதிமன்றத்துக்கு வந்து ஜாமீன் கேட்பார். அவருக்கு ஜாமீன் கிடைக்கலாம் அல்லது கிடைக்காமலும் போகலாம். அப்படி கிடைக்காமல்போனால் அன்றே குடும்பத்துடன் கைது செய்யப்படவும் வாய்ப்புள்ளது. விசாரணைக்காக போயஸ் கார்டன் அழைக்கப்பட்டபோது அவரது செல்போனை பூங்குன்றன் வாங்கிக் கொண்டார் என்றும் அப்போது புகார் சொல்லியிருந்தார் புஷ்பா. அந்த செல்போன்தான் புஷ்பாவுக்கு பெரும் தலைவலியாக மாறியிருக்கிறது. புஷ்பாவின் செல்போனில் இருந்த மெசேஜ்கள், வாட்ஸ் அப்பில் இருந்த மெசேஜ்கள் என ஒன்றுவிடாமல் கார்டன் வட்டாரம் கையில் எடுத்துள்ளது.

(பால் வளத்துறை அமைச்சர் சண்முகநாதன்)
அப்படி எடுக்கப்பட்ட தகவல்களின் அடிப்படையில்தான் தற்போது அதிரடியும் தொடங்கியிருக்கிறது. சசிகலா புஷ்பா கட்சியிலிருந்து நீக்கப்படுவதற்குமுன்பு, அவரோடு அதிகளவில் தொடர்பில் இருந்தவர்கள் பால் வளத்துறை அமைச்சரான சண்முகநாதன் மற்றும் திருநெல்வேலி புறநகர் மாவட்டச் செயலர் நாராயணபெருமாள். இவர்கள் இருவரும் சசிகலா புஷ்பாவுடன் அதிகளவில் பேசியிருப்பதும், மெசேஜ் பரிமாற்றங்கள் செய்திருப்பதும் தெரிய வந்திருக்கிறது. அந்தத் தகவல்களை மட்டும் வைத்து நடவடிக்கை எடுக்கப்படவில்லை. சண்முகநாதன், நாராயணபெருமாள் இருவரது நடவடிக்கைகளையும் கடந்த இரண்டு வாரங்களாக தீவிரமாகக் கண்காணிக்க, கார்டனில் இருந்து உளவுத்துறை போலீஸுக்கு உத்தரவு போயிருக்கிறது. இருவரும், டெல்லியில் இருக்கும் புஷ்பாவுடன் வேறு நம்பர்களில் இருந்து போனில் பேசியதையும் கண்டுபிடித்திருக்கிறது உளவுத்துறை.
இதில், சண்முகநாதனுக்கும் சசிகலா புஷ்பாவுக்கும் இருந்த நட்புபற்றி சில வருடங்களுக்குமுன்பே சர்ச்சை கிளம்பியது. தற்போது, சசிகலா புஷ்பா வீட்டில் வேலைபார்த்த பெண்கள் இருவர், அவருக்கு எதிராக பாலியல் புகார் கொடுத்துள்ளனர். அவர்களை புஷ்பா வீட்டில் வேலைக்குச் சேர்த்துவிட்டது சண்முகநாதன்தான் என்றும் அவர்கள் புகாரில் சொல்லியிருக்கிறார்கள். இப்படியான ஆதாரங்கள் அத்தனையும் சண்முகநாதனுக்கு எதிராகவே இருந்தது. தற்போது, சட்டமன்றம் நடக்கும் நேரத்தில் அமைச்சரவையில் எதுவும் மாற்றம் செய்தால், அது எதிர்க்கட்சிகளின் வாய்க்கு அவல் போட்டதுபோல ஆகிவிடும் என்பதால்தான் சண்முகநாதனின் கட்சிப் பொறுப்பை மட்டும் பிடுங்கியிருக்கிறார் ஜெயலலிதா. சட்டமன்ற கூட்டத் தொடர் முடிந்தபிறகு அமைச்சரவையிலும் ஜெயலலிதா கை வைப்பார். அப்போது ஆட்டம் காணப்போகும் அமைச்சர்கள் பட்டியலில் சண்முகநாதனுக்கே முதலிடம் என்று சொல்கிறார்கள்.
அடுத்து, திருநெல்வேலி புறநகர் மாவட்டச் செயலர் நாராயணபெருமாள் பற்றிச் சொல்கிறேன். சட்டமன்றத் தேர்தல் முடிந்ததும் அதிரடியாக மாவட்டச் செயலாளர்களை மாற்றினார் ஜெயலலிதா. அதாவது, தேர்தல் சமயத்தில் சரியாகப் பணியாற்றாத பலரின் பதவிகள் காலியானது. அப்படி, பதவி பறிக்கப்பட்டவர் நெல்லை புறநகர் மாவட்டச் செயலாளராக இருந்த முருகையாபாண்டின். இவருக்குப் பதிலாக நியமிக்கப்பட்டவர்தான் நாராயணபெருமாள். மாவட்ட ஊராட்சிக் குழு தலைவரான நாராயணபெருமாளுக்கு ஆரம்பத்தில் இருந்தே பலவகையில் உதவியாக இருந்தது சசிகலா புஷ்பாதான். நாராயணபெருமாளுக்கு ஊராட்சிக் குழு தலைவர் பதவியை பெற்றுத்தந்தவரும் புஷ்பாதான். மாவட்டச் செயலாளர் பதவிக்கு நாராயணபெருமாள் பெயரை அமைச்சர் ஒருவரின் மூலமாக சிபாரிசுசெய்த பெருமையும் புஷ்பாவுக்கு உண்டு. அந்த நன்றிக்காகவே அவர் புஷ்பாவுடன் தொடர்ந்து பேசியிருக்கிறார். அதுதான் அவருக்கு சிக்கலில் முடிந்திருக்கிறது” என்று முடிந்தது அந்த ஸ்டேட்டஸ்.
அதற்கு லைக் போட்ட வாட்ஸ் அப், ஸ்டேட்டஸை காப்பி செய்து ஷேர் செய்தது.
’முன்னாள் அரசு கொறடாவும் திருச்சி மாநகர மாவட்டச் செயலாளராக இருந்த மனோகரன் பதவியும் பறிக்கப்பட்டுள்ளதே... அதுக்கு என்ன காரணம்?’ கமெண்ட்டில் வாட்ஸ் அப் கேட்ட கேள்வி.
‘அடுத்த ஸ்டேட்டஸ் ஆகவே அதை அப்டேட் பண்றேன்... படிச்சுகோங்க...!’ என்று ரிப்ளைஸில் போட்டது ஃபேஸ்புக்.
சொன்னபடி அடுத்த ஸ்டேட்டஸ் சற்றுநேரத்தில் அப்டேட் ஆனது. ‘கடந்த சட்டமன்றத் தேர்தலில் போட்டியிட்ட மனோகரன் தோல்வியடைந்தார். தற்போது அமைச்சராக இருக்கும் வெள்ளமண்டி நடராஜனை அரசியலில் வளர்த்துவிட்டவர் மனோகரன். அவருக்கு அமைச்சர் பதவி கிடைக்கும் என மனோகரன் கொஞ்சமும் எதிர்பார்க்கவில்லை. நடராஜன் அமைச்சரான பிறகு மனோகரன் அடிக்கடி மூக்கை நுழைக்க ஆரம்பித்தார். ‘என்னைக் கேட்காமல் இதை நீங்க எப்படிச் செய்யலாம்...’ என்று, அடிக்கடி நடராஜனை நோஸ்கட் செய்ய ஆரம்பித்திருக்கிறார். பொறுத்துப்பார்த்தார் நடராஜன். இதெல்லாம் எங்காவது ஒருநாள் சிக்கலில் முடிந்துவிடும் என யோசித்த நடராஜன், சில வாரங்களுக்குமுன்பு கார்டனில் இதுபற்றி சொல்லிவிட்டாராம். அதன்பிறகே விசாரணை தொடங்கியிருக்கிறது. உளவுத்துறை போலீஸாரும் மனோகரனின் செயல்பாடுகள் குறித்து ரிப்போர்ட் கொடுக்க... மனோகரன் பதவி பறிபோயிருக்கிறது.’ என்பதுதான் அடுத்த ஸ்டேட்டஸ்.

(திருச்சி மனோகரன்)
அந்த ஸ்டேட்டஸ்க்கு லைக் போட்டு, ஷேர்செய்த வாட்ஸ் அப், ‘அப்படியானால் சட்டமன்ற கூட்டத் தொடர் முடிந்ததும் அமைச்சரவையில் மாற்றம் இருக்குமா?’ என்று கமெண்டில் மறுபடியும் ஒரு கேள்வியைப் போட... ‘ இல்லாமல் இருந்தால்தான் ஆச்சர்யம்!’ என்று ரிப்ளைஸில் போட்டு சைன் அவுட் ஆனது ஃபேஸ்புக்.  மின்னம்பலம்.காம்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக