செவ்வாய், 2 ஆகஸ்ட், 2016

ரஞ்சித்தின் பெண் பாத்திரங்கள் கணவனை காதலனை நீ, வா, போ என்று ஒருமையில்... இயல்பானது!

Kiruba Munusamy's photo.இயக்குநர் பா. ரஞ்சித் அவர்களின் திரைப்படங்களில் வரும் பெண் கதாப்பாத்திரங்கள் தன் காதலனை, கணவனை நீ, வா, போ என்று அழைப்பது என்னை மிக மிக கவர்ந்த ஒன்று.
கபாலி படத்தில் ரஜினி கதாநாயகன் என்றதும், இது போன்ற வசனங்கள் எப்படி உருவாக்கப்பட்டிருக்கும் என்ற யோசனைகள் கூட இருந்தது.
ரஜினியின் மனைவி கதாப்பாத்திரம் உரிமையோடு ஒருமையில் பேசியது போது ரஞ்சித் தன்னிலையில் இருந்து ஒரு அடி கூட நகரமாட்டார் என்பதையே அது காட்டியது.
ஒடுக்கப்பட்ட சமூகங்களில் பெண்கள் எப்போதுமே கூடுதல் சுதந்திரத்தோடு செயல்படுவார்கள். அதை நான் நிறைய கண்டிருக்கிறேன், உணர்ந்தும் இருக்கிறேன்.

அப்பெண் கதாப்பாத்திரம் அங்ஙனம் அழைக்கும் போது என் அம்மா அப்பா இருவருக்கும் இடையேயான உரையாடல்களே என் மனதில் வந்து போயின.
மகிழ்ச்சி  முகநூல் பதிவு : கிருபா முனுசாமி

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக