செவ்வாய், 2 ஆகஸ்ட், 2016

லவ்லின்.. நடிகைகள் சரிதா விஜி குடும்பத்தில் இருந்து மேலும் ஒருவர் திரைக்கு..

நடிகைகள் சரிதா, விஜி குடும்பத்திலிருந்து மேலும் ஒரு நாயகி வெள்ளித்திரையில் கால் பதிக்கவுள்ளார். அதுகுறித்த செய்தியை கீழே பார்ப்போம். நடிகைகள் சரிதா, விஜி குடும்பத்திலிருந்து மேலும் ஒரு நாயகி வெள்ளித்திரையில் கால் பதிக்கவுள்ளார்.  தமிழ் சினிமாவில் தன்னுடைய எதார்த்த நடிப்பால் ரசிகர்களைக் கவர்ந்தவர் சரிதா. இவரின் சகோதரி விஜியும் நடிகைதான் 'ஆரோகணம்' உள்ளிட்ட பல படங்களில் விஜி தன்னுடைய சிறந்த நடிப்பை வெளிப்படுத்தியிருக்கிறார்.
சரிதா, விஜி வழியில் விஜி-சந்திரசேகர் தம்பதியின் மகள் லவ்லினும் நடிப்புலகில் பிரவேசிக்கவிருக்கிறார். லவ்லினின் புதிய படத்தின் படப்பிடிப்பு அக்டோபர் மாதம் தொடங்கவுள்ளது.
இப்படத்தின் மற்ற நடிகர் நடிகையர் உள்ளிட்ட அதிகாரப்பூர்வ அறிவிப்புகள் விரைவில் வெளியிடப்படும் என தயாரிப்பு தரப்பில் தெரிவித்துள்ளனர். நடிப்பின் மீதுள்ள ஆர்வத்தால் லவ்லின் மும்பையில் இருக்கும் அனுபம் கேர் பள்ளியில் நடிப்பு கலையை முறையாக பயின்றவர் என்பது குறிப்பிடத்தக்கது. வெப்துனியா.com

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக