செவ்வாய், 2 ஆகஸ்ட், 2016

சுவாதிக்கு பொங்கின பார்பனர்கள் கலைச்செல்விக்கு எங்கே போனீர்கள்? முகநூல் : Sumee Suma

தஞ்சாவூர், சாலியமங்கலத்தில் பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்டு கொடூரமாகக் கொல்லப்பட்டிருக்கிறார் தலித் பெண் ஒருவர்.
' எங்க கிராமத்துல வருஷத்துக்கு 15
பொண்ணுகளை தூக்கிட்டுப் போய்க்
கெடுக்கறாங்க. எங்களுக்கு ஒரு தீர்வைக்
கொடுங்கய்யா' எனக் கதறுகிறார்கள்
கிராமத்து மக்கள்.

தஞ்சாவூர், அம்மாப்பேட்டை காவல்நிலைய
எல்லைக்கு உள்பட்ட சாலையோர கிராமம் சாலியமங்கலம். இந்தப் பகுதியில் தலித்
சமூகத்து மக்கள் குறைந்த எண்ணிக்கையில்
வசித்து வருகின்றனர். சாதி இந்துக்கள் பெரும் எண்ணிக்கையில் உள்ளனர்.
கடந்த 31-ம் தேதி இரவு தலித் சமூகத்தைச்
சேர்ந்த ராஜேந்திரன் என்பவர் மகள் கலைச் செல்வி, தோட்டம் ஒன்றின் முள்புதரில் நிர்வாணமான
நிலையில் கொலை செய்யப்பட்டுக் கிடந்திருக்கிறார். படுகொலைக்கு முன்னதாகக் கொடூரமான
சித்ரவதைக்கு ஆளாக்கப்பட்டிருக்கிறார்.

இதையடுத்துக் கொலைக்குக் காரணமான
ராஜா மற்றும் குமார் ஆகியோரைக் கைது
செய்திருக்கிறது போலீஸ். குற்றவாளிகளை
ரிமாண்ட் செய்வதில் காவல்துறை
கால தாமதம் செய்ய, மதுரை எவிடென்ஸ்
அமைப்பு தலையிட்டு ரிமாண்ட்
செய்ய வைத்திருக்கிறது.
"அந்தப் பொண்ணு இருக்கற இடமே தெரியாது.
சம்பவம் நடந்த அன்னைக்கு நைட் புள்ளை
எங்க போச்சுன்னு ஊர் முழுக்க தேடிக்கிட்டு
இருந்தாங்க. விடிய விடிய தேடியும் கிடைக்கல.
மறுநாள் காலையில முள்புதர்ல நிர்வாணமா கிடக்கறாள்னு செய்தி வந்துச்சு. கொடூரமா
கொன்னு போட்டுட்டானுங்க. குமார், ராஜான்னு
இந்த பேருக்கும் ஊருக்குள்ள எந்த வேலையும்
இல்லாம, வெட்டியா இருப்பானுங்க. தலித் பொண்ணுங்களைத் தூக்கிட்டுப் போறதுதான்
இவனுக வேலையே. அவங்க சமூகத்து
பெரியவங்களும் இதைத் தட்டிக் கேட்க
மாட்டாங்க" என வேதனைப்பட்டனர்
கலைச்செல்வியின் உறவினர்கள்.
கலைச்செல்வியின் அப்பா ராஜேந்திரனோ,
" என் புள்ளையக் கொன்ன மாதிரியே அவனுங்களும் சாகனும். எங்களுக்கு வேற எதுவும் வேணாம். அரசாங்கத்தோட எந்த உதவியும் வேண்டாம்"
எனக் கதறி அழுதார்.
கொலையான பெண் உயர்சாதி, ஐடி ஜாப்
பெண்ணாகவும், குற்றவாளி தலித் or
முஸ்லீம் ஆகவும் இருந்தால் தான்
பொங்குவிங்களா...?
சுவாதியை விட பலமடங்கு சித்திரவதை
செய்யப்பட்டு கொல்லப்பட்ட தலித்
பெண்ணுக்கு பொங்க மாட்டிங்ககளா...?
எங்கே, நேர்மையான நல்ல மனுஷ ஜென்மமா இருந்தா , 'குற்றவாளிகள் மீது உடனடி நடவடிக்கை எடுக்கச்சொல்லி' பொங்குங்க பார்க்கலாம்....

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக