புதன், 24 ஆகஸ்ட், 2016

இந்திய நீர்மூழ்கிக் கப்பல்: கசிந்தது ரகசியம்!


 minnambalam.com :ஆஸ்திரேலியாவைச் சேர்ந்த புலனாய்வு ஊடகவியலாளர் கேமரூன் ஸ்டீவர்ட் ஆஸ்திரேலிய இணைய ஊடகத்தில் அம்பலப்படுத்தியுள்ள ஆவணம் ஒன்று இந்தியாவின் பாதுகாப்புத்துறையை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. இந்திய கடற்படையில் இணைப்பதற்காக அதி நவீன நீர்முழ்கிக் கப்பல்களாக தொடர்பான ஆயிரம் பக்க ஆவணங்கள் ஆஸ்திரேலிய ஊடகத்தில் கசிந்துள்ளது.
இந்திய கடற்படைக்கு பிரான்ஸ் நிறுவனம் தயாரித்த ஸ்கார்ப்பியன் நீர்முழ்கி கப்பல் தொடர்பான ரகசிய ஆவணங்கள் கசிந்துள்ளது எப்படி என்ற கேள்வி வியப்பையும் அதிர்ச்சியையும் உருவாக்கி உள்ளது.

பிரான்ஸ் நாட்டின் தொழில்நுட்பத்தில் டி.சி.எஸ்.என் என்ற நிறுவனத்தின் வடிவமைப்பில் இந்தியாவில் 6 நீர்மூழ்கிகப்பல்கள் தயாரிக்க முடிவெடுக்கப்பட்டு, ஒரு கப்பல் தயார் செய்யப்பட்டுள்ளது. இந்த கப்பல் இந்தியாவின் கடல்பாதுகாப்பில் முக்கியமானதாக இருக்கும் என எதிர்பார்க்கப்படும் சூழலில் அது தொடர்பான ஆவணங்கள் வெளியாகிஉள்ளது. இந்திய பாதுகாப்புத்துறையை பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
நீர்மூழ்கி கப்பலின் அனைத்து பாதுகாப்பு அம்சங்கள், வடிவமைப்பு தகவல்கள், சென்சார்களின் எண்ணிக்கை, தாக்கும்திறன் அனைத்துமே வெளியாகி உள்ளதால், இந்திய கடல்பாதுகாப்பு குறித்து கேள்வி எழுந்துள்ளது. இந்த நிலையில்,ஆவணங்கள் வெளியானது பற்றி கருத்து தெரிவித்துள்ள மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் மனோகர் பாரிக்கர், ’இந்த விவகாரம் நேற்று நள்ளிரவு எனது கவனத்துக்கு வந்தது. முதலில், இந்த ஆவணங்கள் கப்பலுடையதுதானா?என்பதை ஆய்வு செய்ய வேண்டியது முதல் நடவடிக்கை ஆகும். எனினும், 100 சதவீத விபரங்கள் கசியவில்லை. கப்பலின்எந்த விஷயங்கள் தொடர்பான தகவல்கள் கசிந்துள்ளது என்பதை ஆய்வு செய்யுமாறு கடற்படை தளபதியைகேட்டுக்கொண்டுள்ளேன். இந்த ஆவணங்கள் இந்தியாவில் இருந்து கசிந்ததாக தெரியவில்லை. கம்ப்யூட்டர்களில்இருந்து ஹேக்கிங் செய்யப்பட்டு இருக்கலாம் என்று கருதுகிறோம். இதை நாங்கள் விரைவில் கண்டறிவோம்’ என்றுதெரிவித்துள்ளார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக