புதன், 24 ஆகஸ்ட், 2016

நளினி சிதம்பரம்:அமலாக்கத்துறை சம்மன்! சாரதா நிதி நிறுவன மோசடி...

பல்லாயிரம் கோடி மோசடியில் சிக்கிய சாரதா நிதி நிறுவன மோசடியில், முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரத்தின் மனைவி நளினிக்குஅமலாக்கத்துறை சம்மன் அனுப்பியுள்ளது. மேற்குவங்கத்தை மையமாகக் கொண்டு செயல்பட்ட சாரதா நிதி நிறுவனத்தை, சுதீப்த சென் என்பவர் 2006ஆம் ஆண்டு தொடங்கினார். சிறிய,பெரிய முதலீடுகளுக்குக்கூட நல்ல வட்டி கொடுக்கிறோம் என்ற கவர்ச்சிகரமான அறிவிப்போடு தொடங்கப்பட்ட அந்த நிறுவனம், நளினி சிதம்பரத்தின் தந்தை முன்னாள் உயர் நீதிமன்ற நீதிபதி கைலாசம்,தாய் பிரபல கவிஞர் சௌந்தரா கைலாசம் ஆகும் 
தன்வாடிக்கையாளர்களிடம் இருந்து ரூ.6,000 கோடியை திரட்டியது. அப்படித் திரட்டிய நிதியைக் கொண்டு சுற்றுலாப் போக்குவரத்து, ஹோட்டல்தொழில், திரைப்படத் துறையில் முதலீடு, தொலைக்காட்சி நிறுவனங்கள், பத்திரிகைகள், ரியல் எஸ்டேட் வியாபாரம், மோட்டார் சைக்கிள்உற்பத்தி, அடித்தளக் கட்டமைப்பில் முதலீடு என்று சாரதா பிரம்மாண்டம் காட்டியது. இந்திய முதலீட்டுச் சட்டப்படி 50க்கும்மேற்பட்டவர்களிடமிருந்து, இப்படியான முதலீடுகளைத் திரட்டும்போது நிதி நிறுவனங்களை கண்காணிக்கும் மத்திய அரசு அமைப்பானசெபியிடம் அனுமதி பெறவேண்டும்.
2009இல் செபி நோட்டீஸ் அனுப்பியதும் சாரதா என்ற நிறுவனத்தை உடைத்து, பல நிறுவனங்களாக மாற்றி சிபியை ஏமாற்றியது. இன்னொருபக்கம்,முதலீட்டாளர்களிடம் திரட்டிய நிதிக்கான வட்டியையும் கொடுக்கவில்லை. அசலும் திருப்பிச் செலுத்தப்படவில்லை. இதனால் பணத்தைக்கொடுத்தவர்கள் அந்நிறுவனத்துக்கு எதிராக புகார்களைக் கொடுத்தார்கள். இதுதொடர்பாக, மேற்குவங்க மாநிலத்தில் கடுமையான சர்ச்சைகள்உருவாக, மேற்குவங்க அரசு விசாரணைக் கமிஷன் அமைத்தது. உச்சநீதிமன்றம் சிபிஐ விசரணைக்கு உத்தரவிட்டது. இந்த வழக்கில், சாரதா நிதிநிறுவன அதிபர் சுதிப்த சென் கைது செய்யப்படுவதற்கு முன்பாக சிபிஐ-க்கு ஒரு கடிதம் எழுதினார்.
அந்தக் கடிதத்தில், தன்னை மிரட்டி ஆதாயமடைந்த தலைவர்கள் பற்றிய விபரங்கள் அதில் இருந்தது. அதில் முன்னாள் மத்திய அமைச்சர்ப.சிதம்பரத்தின் மனைவி பெயரும் இருந்தது. காங்கிரஸ் பிரமுகர் ஒருவர் தொலைக்காட்சி தொடங்க 42 கோடி ரூபாயை கொடுக்குமாறு நளினிசிதம்பரம் நிர்பந்தித்ததாக அந்தக் கடிதம் குறிப்பிடுவதாக செய்திகள் கசிந்தன. இந்த பணப் பரிவர்த்தனை ஒரு வழக்கறிஞராக இருந்துமேற்கொண்ட நளினி சிதம்பரம், தன் வழக்கறிஞர் கட்டணமாக ஒரு கோடியை பெற்றுக்கொண்டதாகவும் புகார் எழ இதுதொடர்பாக ஏற்கனவேசிபிஐ நளினியின் விசாரணை நடத்தியநிலையில் அமலாக்கத்துறை நளினி சிதம்பரத்துக்கு சம்மன் அனுப்பியுள்ளது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக