வியாழன், 18 ஆகஸ்ட், 2016

மின்னம்பலம் : ரூ.690 கோடி - இன்டர்நெட் உலகின் சாதனை!

இந்தியாவில் ‘opera mini’ பிரவுசர் மூலம் இணையத்தைப் பயன்படுத்துவோர் வருடத்துக்கு 36,000 டெராபைட், அதாவது 40,135, 582 GB டேட்டா (Data)வை சேமித்து வருகின்றனர். opera mini-ன் கம்ப்ரஷன் தொழில்நுட்பத்தின் உதவியால், இணையப் பயன்பாட்டாளர்கள் கிட்டத்தட்ட 90 சதவிகிதம் டேட்டாவை மிச்சப்படுத்துவதால் 1 GB-க்கு ரூபாய் 173 என வருடத்துக்கு ரூ.690 கோடியை சேமிக்கின்றனர். தேடல் (Search) இணையம் மூலம் ஆன்லைன் செல்ல முதன்மையான காரணம், இந்தியாவில் opera mini பயன்படுத்துபவர்களில் பத்தில் எட்டு பேர் தேடல் தளமாக கூகுளை பயன்படுத்துகின்றனர். தேடல் வலைத்தளங்களை பயனாளர்கள் அதிக அளவு பயன்படுத்தினாலும், அதிகமாக பயன்படுத்தப்படும் 100 இணைய தளங்களில், தேடல் (Search) பக்கங்களை பயன்படுத்துபவர்களின் எண்ணிக்கை 10 சதவிகிதமாகவே உள்ளன. இதை அடுத்து முறையே 28 சதவிகிதம் மற்றும் 17 சதவிகிதம் என செய்தி, பதிவிறக்கம் ஆகிய தளங்களை பயன்படுத்துபவர்களின் எண்ணிக்கை உள்ளன. கூகிள் பயன்படுத்தாமல் எதைப் பயன்படுத்துகிறார்கள்? என்ற கேள்வி எழுகிறதா?

பெருமளவு நேரம் சமூக வலைதளங்களில் செலவிடுகின்றனர். opera mini பயனர்களில் 55 சதவிகிதம் பேர் சமூக வலைதளங்களையே அதிகமாக உபயோகிக்கின்றனர். அதில் முதன்மையாக ஃபேஸ்புக் இருக்கிறது. இது தவிர்த்து மற்ற பிரபலமான சமூக வலைதளமான பிளாக் ஸ்பாட், வேர்ட் பிரஸ், ட்விட்டர், பின் இண்ட்ரஸ்ட், கியூரா ஆகியவை அடங்கும்.

பயனர்களிடம் இரண்டாவது மிகவும் பிரபலமான வேகமாக நகரும் உலகில் முக்கியமான ஒரு தேவை, நாட்டு நடப்பை தெரிந்து கொள்வது. opera mini பயனர்களின் முதல் 100 வலைத்தளங்கள் பட்டியலில் அதிக அளவில் இருப்பது 31 செய்தி வலைதளங்கள். இதில் நுகர்வோர் தொழில்நுட்பம், விளையாட்டு, பொது செய்தி, அரசியல் என பல்வேறு வலைத்தளங்களில் படித்துக் கொள்கின்றனர். opera mini-ன் இந்தி மொழி செய்தி தளங்களின் வருகையால் ஒரு நிலையான வளர்ச்சி அடைந்துள்ளது.
கடந்த ஜுன் மாதம் முதல் இந்தி மற்றும் ஆங்கிலத்தில் தங்களுக்கு விருப்பப்பட்ட விதத்தில் செய்திகள், தொழில்நுட்பம், பொழுதுபோக்கு, விளையாட்டு, சுற்றுலா என ஆரம்பப் பக்கத்தில் பல்வேறு வகைகளிலான கட்டுரை காட்சிப்படுத்தப்படுகின்றன. இதில் தங்கள் வசதிகேற்ப நாடுகள் மற்றும் தேவையான பிரிவுகளைத் தேர்வு செய்து பயன்படுத்த முடியும்.
ஸ்மார்ட்போன்கள் அதிகரித்து வந்து கொண்டிருந்த சமயம் மக்கள் அதிகமாக இணையங்கள் மூலம் சமூக வலைதளங்களை மட்டுமே பயன்படுத்தி வந்தனர். ஆனால், தற்போது ஸ்மார்ட்போன்களை பயன்படுத்துபவர்கள் செய்தி, ஆன்லைன் ஷாப்பிங், திரைப்படம் பார்த்தல், இசை கேட்பது என கையடக்கக் கணினியை போல் பயன்படுத்த தொடங்கிவிட்டனர். opera mini நிறுவனத்தின் முதன்மை அதிகாரி புரூஸ் லாசன் கூறுகையில், ‘எங்கள் நுகர்வோர்களின் வீடியோ பார்த்தல், பதிவிறக்கம் செயதல் போன்ற தேவைக்கு ஏற்ப வேகமாக இயங்கும் அளவுக்கு எங்களை மேம்படுத்திக் கொண்டோம்’ என்கிறார்.

இசை பதிவிறக்கம் இணையதளங்களுக்கு வரவேற்பு
இந்தியாவில் opera mini பயன்படுத்துபவர்களின் பார்வை 100 வலைத்தளங்களில், 24 பதிவிறக்கம் இணையதளங்களின் மீது தான் உள்ளன. இதில் 75 சதவிகிதம் பேர் பாடல்களை பதிவிறக்கம் செய்வதில் ஆர்வமாக உள்ளனர். இந்தியர்கள் உண்மையிலேயே தங்கள் ஸ்மார்ட்போன்களில் தங்களுக்கு பிடித்த ட்யூன்களை வைத்து ரசிப்பவர்கள். இதில் அதிகமாக mp3lio, Pagalworld, Webmusic, Raagtune மற்றும் Mp3mad போன்ற தளங்கள் பார்க்கப்பட்டுள்ளன.
யூடியூபில் வீடியோக்களை பார்க்கும் முறை
பெரிய HD திரைகளுடன் மலிவான விலையில் ஸ்மார்ட்போன்கள் சமயத்தில் அதிக அளவு வருவதால், அனைவரின் கையிலும் ஸ்மார்ட்போன் இருக்கிறது. இதில் பெரும்பாலானோர் வீடியோக்களை பார்ப்பதில் ஆர்வமாக உள்ளனர். தங்களின் பயணத்தின்போதும், வீட்டில் இருக்கும்போதும் என தங்கள் வசதிகேற்ப ஆன்லைனில் வீடியோக்களை பார்ப்பவர்கள் அதிகமாக விட்டனர். அதனால் opera mini தன் வீடியோ பூஸ்டர் அம்சங்கள் மூலம் லோடிங் இல்லாமல் வீடியோ பார்க்கும்விதமாக தொழில்நுட்பத்தை வளர்த்துள்ளது. இந்தியாவில் யூடியூபினை தொடர்ந்து Vuclip, Dailymotion மற்றும் Hotstar ஆகிய தளங்கள் அதிகமாக பார்க்கின்றனர்.

ஸ்மார்ட்போன்கள் மூலம் ஷாப்பிங்
இந்த காலத்தில் ஸ்மார்ட்போன்கள் மூலம் இருக்கும் இடத்தில் இருந்தே பொருட்களைப் பார்க்கவும், வாங்கவும் வசதியாக அதிகமானோர் ஆன்லைன் ஷாப்பிங் பயன்படுத்துகின்றனர். இதில் 100 வலைத்தளங்களில் ஒன்பது சதவிகிதம் பேர் இ-காமர்ஸ் தளத்தை பயன்படுத்துகின்றனர். அதற்குப்பின் பார்வையிடப்படும் தளங்களில் Amazon, Flipkart, Snapdeal, ShopClues, AskMeBazaar ஆகியவை உள்ளன.
இதன் அறிக்கை மற்றும் முறை பற்றிய பார்வை
இந்த அறிக்கையில் உள்ள செய்திகள் அனைத்தும் இந்தியாவின் தனிப்பட்ட பார்வையாளர்கள் எண்ணிக்கையை அடிப்படையாக கொண்டு ஜுன் 2015-ல் இருந்து மே 2016 வரையிலான காலக்கட்டத்தில் opera mini சர்வர்களின் மேல் தளங்களிலும் ஆய்வு மேற்கொண்டு தொகுக்கப்பட்டவை. இந்த ஆய்வில் ‘அடல்ட் ஒன்லி’ இணைய தளங்களின் ஆய்வை தீங்கு விளைவிக்கும் என்ற நோக்கத்தில் மேற்கொள்ளப்படவில்லை. தரவு செலவு சேமிப்பு கணக்கீட்டின் கீழ், 40, 135, 582 GB சேமிப்பதன் மூலம் ரூ.690 கோடியை சேமித்துவிடும் தகவல்கள் அனைத்தும் ஜுன் 2015 முதல் 2016 மே வரை 12 மாதங்களாக வலைத்தளங்களில் இருந்து opera-வின் சர்வர்களில் அனுப்பப்படும் தரவு அளவு மூலம் தீர்மானிக்கப்பட்டவை.
- வாசுதேவன்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக