வியாழன், 18 ஆகஸ்ட், 2016

நீ ஒரு தாசி, நீ எப்பவுமே தாசிதான்...’ - ஒரு கிழவன் ஒரு பெண்ணைப் பார்த்துக்... ராதிகா ஆப்தே

இணையத்தில் வைரலாகிக் கொண்டிருக்கும் ராதிகா ஆப்தேவின் நிர்வாணக் காட்சியை பலர் பார்த்திருக்கக் கூடும். ‘குமுதவள்ளியின் வீடியோ’ என்று தமிழகத்திலும் உலா வருகிறது. ‘பார்சுடு’ என்ற திரைப்படத்தில் ஒரு காட்சி அது. நிர்வாணக் காட்சியில் ராதிகா ஆப்தேவோடு இருந்தவர் அடில் ஹுசைன். இருவர் நடித்திருந்த இந்தக் காட்சியை, வட இந்திய ஊடகங்கள் ‘ராதிகா ஆப்தேவின் செக்ஸ் சீன்’ என பிரச்சாரம் செய்து கொண்டிருந்ததைப் பார்த்து, தங்களது படத்தின் ஒரு காட்சி வெளியானதைவிட மிகவும் கோபப்பட்டிருக்கிறார் அடில் ஹுசைன். ‘அந்த வீடியோவைப் பார்த்து, ஏன் ராதிகாவின் நிர்வாணப் படமென்று கூவுகிறீர்கள்? அந்தக் காட்சியில் நானும்தான் இடம் பெற்றிருக்கிறேன். என் பெயரை பயன்படுத்தியிருக்கலாமே.

பெண்களைக் காட்சிப் பொருளாக சித்தரிக்க விரும்புகிறவர்களைக் குற்றம் சொல்பவர்களுக்குப் பாடமாக எடுக்கப்பட்ட படத்தை, பெண்ணடிமைத்தனத்தை எதிர்த்துக் கேள்வி கேட்கும் படத்தைப் பற்றிய செய்தியிலேயே இப்படி ஒரு பெண்ணை காமப்பொருளாக சித்தரித்ததற்கு வெட்கப்படவேண்டும்’ என்று தெரிவித்திருக்கிறார் அடில் ஹுசைன்.
2015ஆம் ஆண்டு சர்வதேச டொரன்டோ திரைப்பட விழாவுக்கு, சிறப்புப் பிரிவில் தேர்ந்தெடுக்கப்பட்ட படம்தான் ‘பார்சுடு’. அந்தப் படத்தில் இடம்பெற்றதுதான் அனைவரும் எள்ளி நகையாடும் இந்தக் காட்சி. அந்தப் படத்தைப் பற்றித் தெரியாமலே, ராதிகா ஆப்தேவை பாலியல் படங்களில் நடிப்பவரென்று சிலர் பதிவு செய்திருக்கின்றனர். அந்தத் திரைப்படம், குழந்தைகள் திருமணம், பெண்களுக்கெதிரான வன்கொடுமை, பெண்களின் பொருளாதார சிக்கல்களின்போது சமூகம் அவர்களை எப்படி பயன்படுத்திக் கொள்கிறது என இந்த சமுதாயம் பெண்கள் மேல் திணித்திருக்கும் அத்தனை குற்றங்களையும் எதிர்த்து கேள்வி கேட்கிறது. படத்தின் டிரெய்லரே சமூகத்தின் முகத்தில் காரி உமிழ்கிறது. டிரெய்லரில் வரும் மனதை உறுத்தும் சில காட்சிகளை உதாரணமாகச் சொல்லலாம்.
மாப்பிள்ளை வீட்டார் அவள் கூந்தல் அழகை பாராட்டியதற்காக, குழந்தை திருமணத்துக்குத் தயாராகும் சிறுமி கேட்கிறாள், ‘நான் என் தலைமுடியை அறுத்துக்கொண்டால் இந்தக் கல்யாணம் நின்றுவிடுமா?’
‘நீ ஒரு தாசி, நீ எப்பவுமே தாசிதான்...’ - ஒரு கிழவன் ஒரு பெண்ணைப் பார்த்துக் கூறுகிறான். ‘இவன் வெளியிடங்களில் ரொம்ப இனிமையானவனாக நடந்து கொள்கிறான். வீட்டில் காட்டுமிராண்டித்தனமாக நடக்கிறான்’ என ராதிகா ஆப்தே புலம்பும் காட்சியும் அதில் ஒன்று. கணவனின் குடும்பத்தில் இருக்கும் ஆண்கள் அத்தனை பேரும் தன்னைப் பாலியல் வன்புணர்வுக்கு ஆளாக்குகிறார்கள் என்று தங்கள் வீட்டுப் பெண் புலம்பும்போது ‘குடும்ப மானத்தை வாங்காதே. அமைதியா போய் வாழக் கத்துக்க’ என அனுப்பி வைக்கும் குடும்பம் என அதிரவைக்கிறது டிரெய்லர்.
இந்த நிர்வாணக்காட்சி வெளியான ஆரம்பத்தில், இதற்கு முன்பே ராதிகா ஆப்தே நடித்த ஒரு நிர்வாணக் காட்சியை வெளியிட்டு, அந்த படத்துக்காக புரமோஷன் தேடுகிறார்கள் என்று கிளம்பிய குற்றச்சாட்டு பற்றி பேசப்பட்டது. அதற்குள் வேறு விதத்தில் லைட்டைத் திருப்பி விட்டுவிட்டார்கள்.  மின்னம்பலம்.com

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக