ஞாயிறு, 31 ஜூலை, 2016

கவர்னர் ரோசையாவின் குடும்பத்தோடு மிக நெருங்கிய நட்புடன் bogusvotescm ஜெயலலிதா...

* பூங்கொத்தை தள்ளி நின்றுதான் நீட்ட வேண்டும்.
* முதல்வரை நெருங்கி நிற்கக் கூடாது.
* கை குலுக்கக் கூடாது.
* சால்வையை அணிவிக்கக் கூடாது. கையில்தான் தர வேண்டும்.

– முதல்வர் ஜெயலலிதாவைச் சந்திக்க போகிறவர்களுக்கு தரப்படும் இன்ஸ்ட்ரக்‌ஷன்கள் இவை. வெளிநாட்டுக்காரர்கள், முக்கிய ராணுவத் தளபதிகள் என மிகச் சிலர்தான் ஜெயலலிதாவிடம் கை குலுக்கியிருக்கிறார்கள்.
மேட்டருக்கு வருவோம். ஜெயலலிதாவிடம் கை குலுக்குவது என்பதே அபூர்வமாக நடக்கும் விஷயம் எனும் நிலையில், ஜெயலலிதாவின் நெற்றியிலேயே ஒருவர் பொட்டு வைத்திருக்கிறார் என்றால், அது ஆச்சர்யமான செய்திதானே! அவர், கவர்னர் ரோசய்யாவின் மருமகள்.
அதாவது ரோசய்யாவின் மகன் ஶ்ரீமன் நாராயணமூர்த்தியின் மனைவி.
ரோசய்யாவின் பேரனும் ஶ்ரீமன் நாராயணமூர்த்தியின் மகனுமான அனிருத்தின் திருமணம், ஹைதராபாத்தில் வரும் ஆகஸ்ட் 14 ம் தேதி நடைபெறுகிறது. இதற்கு அழைப்பிதழ் தர ஶ்ரீமன் நாராயணமூர்த்தியும், அவருடைய மனைவியும் ஜெயலலிதாவை கோட்டையில் சந்தித்தனர். அப்போதுதான் ஜெயலலிதாவின் நெற்றியில் குங்குமம் வைத்தார்,  ஶ்ரீமன் நாராயணமூர்த்தியின் மனைவி. அதை ஏற்றுக் கொண்டார் ஜெயலலிதா.
” இந்த அளவுக்கு, கவர்னர் ரோசய்யாவுக்கும் அவருடைய குடும்பத்தினருக்கும் ஜெயலலிதாவிடம் நெருக்கம் இருப்பதற்குக் காரணமே, அ.தி.மு.க அரசுடன் வெகு இணக்கமாக கவர்னர் ரோசய்யா செயல்படுவதுதான்” என்கிறார்கள் விவரமறிந்தவர்கள்.

2014 ல் மத்தியில் பி.ஜே.பி. ஆட்சி அமைந்த பிறகு, முந்தைய காங்கிரஸ் ஆட்சியில் நியமிக்கப்பட்ட பல்வேறு மாநில கவர்னர்கள் வீட்டுக்கு அனுப்பப்பட்டனர். ஆனால், பக்கா காங்கிரஸ்காரரான ரோசய்யா மட்டும் ’சேஃப்டி’ எல்லையிலேயே இருந்தார். ஆந்திரா காங்கிரஸ் அமைச்சரவைகளில் பலமுறை மந்திரியாகவும் கடைசியாக முதல்வராகவும் பதவி வகித்தவர் ரோசய்யா. 2011 ல் ரோசய்யாவை தமிழக கவர்னராக நியமித்தது, அன்றைக்கு மத்திய ஆட்சியை கையில் வைத்திருந்த காங்கிரஸ். இந்நிலையில் பி.ஜே.பி. ஆட்சிக்கு வந்தபோது, காங்கிரஸ்காரரான ரோசய்யா மட்டும் விட்டு வைக்கப்பட்டதற்கு காரணம், ஜெயலலிதாவிடம் அவர் காட்டிய மரியாதைதான்.
அதுமட்டுமா… அ.தி.மு.க. ஆட்சி மீது ஊழல் புகார்களை அடுக்கிய ராமதாஸ், கருணாநிதி, ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் போன்றோர் ரோசய்யாவிடம் அதை மனுவாகவும் கொடுத்தார்கள். ஆனால், அதற்கு எந்தவித பதில் நடவடிக்கையும் எடுக்கப்படவே இல்லை.
இதுமட்டுமா… வாக்காளர்களுக்குப் பணமும், பரிசுப் பொருட்களும் கொடுத்ததாக எழுந்த புகாரில்,  சட்டசபை தேர்தலுக்கு இரண்டு நாட்கள் முன்பு அரவக்குறிச்சி, தஞ்சை தொகுதிகளின் தேர்தல் தள்ளிவைக்கப்பட்டது. அப்போது, திடீர் திருப்பமாக கவர்னர் ரோசய்யா இந்த விவகாரத்தில் தலையிட்டார். தலைமைத் தேர்தல் அதிகாரி ராஜேஷ் லக்கானியை அழைத்து விசாரித்தார். தேர்தலை உடனே நடத்த வேண்டும் என்றும் தேர்தல் கமிஷனுக்கு பரிந்துரைத்தார். அதாவது இந்த தேர்தல் விஷயத்தில் அ.தி.மு.க.வைவிட அதீத ஆர்வம் காட்டினார் ரோசய்யா.
ஆனால் தஞ்சை, அரவக்குறிச்சி தொகுதிகளின் தேர்தலையே ரத்து செய்த தேர்தல் கமிஷன், ‘இப்படி கவர்னர் நடந்துகொண்டதை தவிர்த்து இருக்கலாம்’ என ரோசய்யாவுக்கு குட்டும் வைத்தது.
துணைவேந்தர் நியமனத்தில் நடந்த முறைகேடுகள் பற்றி ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் சொல்ல,  அவர் மீது அவதூறு வழக்குப் போட்டார் கவர்னர் ரோசய்யா. இத்தனைக்கும் ஈ.வி.கே.எஸ். இளங்கோவனும் ரோசய்யாவும் காங்கிரஸ்காரர்கள். அந்த அளவுக்கு அ.தி.மு.க பாசக்காரர் ரோசய்யா! vikatan.com

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக