சனி, 30 ஜூலை, 2016

வாங்கிய பிஸ்கெட்டுகளின் உறை பிரிக்கப்படும் முன்பே அவர்கள் கொல்லப்பட்டார்கள்”: 15 ரூபாய் கடனுக்காக கோடாலியால் கொல்லப்பட்ட தலித் தம்பதி

உத்திரபிரதேசம் தலித்துகளுக்கு எதிரான வன்முறைகளை அரங்கேற்றுவதில் பெயர்போன மாநிலம். உ.பி. மெயின்புரியில் ரூ. 15 கடன் பாக்கி வைத்ததற்காக தலித் தம்பதியை ஒரு வெறிபிடித்த கடைக்காரர் கோடாலியால் வெட்டிக் கொன்றிருக்கிறார்.
விவசாயக் கூலிகளாகப் பணிபுரியும் தலித் தம்பதி, வெறும் ஐந்து ரூபாயை வைத்துக்கொண்டு பணிக்குச் சென்றிருக்கிறார்கள். அந்த ஐந்து ரூபாய் ஒரு பிஸ்கெட் பாக்கெட் வாங்கிக்கொண்டிருப்பதை பார்த்த,கடைக்காரர் நேற்று வாங்கிய பொருட்களுக்காக ரூ. 15 தரவேண்டுமே அதைக் கொடுங்கள் என்று கேட்டிருக்கிறார். அதைத் தந்துவிடுகிறோம் பொறுத்துக்கொள்ளுங்கள் என சொன்ன தம்பதியை கீழ்த்தரமான வார்த்தைகளால் வாட்டியிருக்கிறார் கடைக்காரர் மிஸ்ரா. தம்பதி அப்படி பேச வேண்டாம் எனக் கூறியதைப் பொறுக்க முடியாமல், வீட்டிலிருந்த கோடாலியைக் கொண்டுவந்து அவர்களைத் தாக்கியுள்ளார். இதில் சம்பவ இடத்திலேயே தம்பதி இறந்தவிட்டனர்.

குடிசையில் வசிக்கும் அந்த தம்பதிக்கு இரண்டு மகள்களும் மூன்று மகன்களும் உள்ளனர். மகள்களுக்கு திருமணமாகிவிட்டது. மூன்று மகன்களும் முறையே 15, 13, 8 வயதுடையவர்கள். இவர்கள் அனாதரவாக நிற்கின்றனர்.
“வாங்கிய பிஸ்கெட்டை உறைகளைப் பிரிக்கும் முன்பே என் பெற்றோர் கொல்லப்பட்டுள்ளனர். என்னுடைய மூன்று தம்பிகளை வைத்து காப்பாற்றும் அளவுக்கு என்னுடைய வாழ்க்கை இல்லை. நாங்கள் உழைப்பது எங்களுடைய வயிற்றுப் பாட்டுக்கே போதுமானதாக இல்லை” என்கிறார் கொல்லப்பட்ட தம்பதியின் இரண்டாவது மகள் மிலன்.
மாநில அரசு ரூ. 5 லட்சம் உதவித்தொகை அறிவித்துள்ள நிலையில், எப்போது அவர்களுடைய கைகளில் சேரும், அதுவரை அந்தச் சிறுவர்களின் நிலை என்னாகும் என்பது கேள்விக்குறியாக உள்ளது.   thetimestamil.com

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக