திங்கள், 11 ஜூலை, 2016

நந்திதா தாஸ் மீண்டும் தமிழில்... சமுத்திர கனியுடன்...

நந்திதாதாஸ் நடித்த தமிழ்ப்படங்களை விரல்விட்டு எண்ணிவிடலாம். அழகி, நீர்ப்பறவை, கன்னத்தில் முத்தமிட்டால் என ஒரு சில தமிழ் படங்களில் மட்டுமே நடித்திருக்கிறார். புதிய படங்களில் நடிக்க வாய்ப்பு வந்தபோதும் வேடங்கள் பிடிக்காததால் நடிக்க மறுத்துவிட்டார். தற்போது இந்தியிலும் பொருத்தமான கதாபாத்திரங்கள் கிடைக்காததால் இயக்குநர் பொறுப்பை ஏற்றுள்ளார். ஏற்கனவே அரசியல் பின்னணியுடன் கூடிய ‘பைராக்’ என்ற படத்தை இயக்கி உள்ளார். இவரின் அடுத்தப் படத்தை ஐரோப்பிய தயாரிப்பாளர் ஒருவர் தயாரிக்க உள்ளார். தற்போது அதற்கான ஸ்கிரிப்ட் தயாரித்து வருகிறார். இந்நிலையில் நீண்ட இடைவெளிக்கு பிறகு மீண்டும் தமிழில் நடிக்க ஒப்புக்கொண்டிருக்கிறார் நந்திதா தாஸ். >பாடலாசிரியர் குட்டி ரேவதி இயக்கும் படத்தில் நடிக்க உள்ளார். இப்படத்தில் சமுத்திரக்கனி ஹீரோ. குடும்ப பெண்கள் மீது பாயும் வன்முறைகளை எடுத்து சொல்லும் கதையாக இது உருவாக உள்ளது.  minnambalam.com

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக