திங்கள், 11 ஜூலை, 2016

அரசு காப்பகத்தில் இருந்து 35 சிறுவர் ஓட்டம் 19 பேர் பிடிபட்டுள்ளனர்

சென்னை புரசைவாக்கம் அரசு கூர்நோக்கு இல்லத்தில் இருந்து தப்பியோடிய 35 சிறுவர்களில் 19 பேர் பிடிபட்டுள்ளனர். மீதம் உள்ள சிறுவர்களை தேடும் பணியில் போலீசார் தொடர்ந்து ஈடுபட்டுள்ளனர்.கெல்லீஸ் பகுதியில் அமைந்துள்ள கூர்நோக்கு இல்லத்தில் சிறார் குற்றவாளிகள் பராமரிக்கப்பட்டு வருகின்றனர். அவர்களில் இரு குழுக்களிடையே மோதல் ஏற்பட்டுள்ளது. மோதலின்போது கூர்நோக்கு இல்லத்தின் சுற்றுச்சுவர் மேலே ஏறி 35 பேர் தப்பினர். போலீசார் தேடியதில் 19 பேர் பிடிபட்டனர். மீதம் உள்ள சிறுவர்களை தேடும் பணியில் போலீசார் தொடர்ந்து ஈடுபட்டுள்ளனர். பிடிபட்ட சிறுவர்களில் 3 பேர் டியூப் லைட்டுகளை உடைத்து தங்களது உடல்களில் கீறிக்கொண்டு தங்களை விடுவிக்குமாறு
முழக்கமிட்டனர்.;இந்த சம்பவத்தால் கூர்நோக்கு இல்லத்தில் போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர். கூர்நோக்கு இல்லத்தில் பராமரிக்கப்பட்டு வரும் சிறுவர்களின் பெற்றோர்களும் குவிந்துள்ளதால் அங்கு பதட்டமாக காணப்படுகிறது. 

படங்கள்: அசோக்குமார்  nakkheeran.in

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக