செவ்வாய், 12 ஜூலை, 2016

தமிழக காங்கிரஸ் தலைமை பதவிக்கு குஷ்புவின் பெயரும் பரிசீலனையில் உள்ளது

தமிழக காங்கிரஸ் தலைவர் பதவியை தந்தால், அதை ஏற்க தயார்,'' என்று, நடிகை குஷ்பு கூறினார்.தமிழக காங்கிரசுக்கு, புதிய தலைவரை நியமிப்பது தொடர்பாக, காங்கிரஸ் மேலிடம் தீவிர ஆலோசனையில் உள்ளது. இது தொடர்பாக காங்கிரஸ் துணைத் தலைவர் ராகுல், தமிழக காங்கிரசின் முக்கிய தலைவர்களை அழைத்து, ஆலோசனை நடத்தினார்.இந்நிலையில், அகில இந்திய காங்கிரஸ் செய்தி தொடர்பாளர் குஷ்பு,நேற்று டில்லியில், ராகுலை சந்தித்துப் பேசினார்.பின், அவர் அளித்த பேட்டி:தமிழக அரசியல் நிலவரங்கள் குறித்து, ராகுலுடன் பேசினேன். தலைவர் பொறுப்பிலிருந்து, இளங்கோவன் ராஜினாமா செய்ததற்கு, சட்டசபைத் தேர்தல் தோல்வியே காரணம்.இளங்கோவன் தலைமையில் தான்,தமிழகத்தில் பின் தங்கி இருந்த காங்கிரஸ், சற்று முன்னேறியுள்ளது. ஓட்டு வங்கி அதிகரித்துள்ளது.

தமிழக காங்கிரசுக்கான புதிய தலைவர், கட்சித் தலைவி சோனியாவால், விரைவில் அறிவிக்கப்படுவார்.
தமிழக காங்கிரஸ் தலைவர் பதவியில் என்னை நியமிக்க கட்சி மேலிடம் ஆசைப்பட்டால், ஏற்க தயார்தான்; ஆனால், சாத்தியம் இல்லை.இவ்வாறு அவர் கூறினார். -- நமது டில்லி நிருபர்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக