வெள்ளி, 8 ஜூலை, 2016

டல்லாஸ் துப்பாக்கி சூடு 5 போலீஸ் அதிகாரிகள் சுட்டுக்கொலை Dallas shooting: 5 police officers killed during protest

அமெரிக்காவின் டல்லாஸ் நகரில் போலீசுக்கு எதிராக நடைபெற்ற போராட்டினத்தின் போது ஸ்னிபர் தாக்குதலில் (மறைந்திருந்து துப்பாக்கியால் சுடுதல்) 5 அதிகாரிகள் கொல்லப்பட்டனர். அமெரிக்காவின் லூசியானா மாகாணத்தில் பேட்டன்ரூஜ் நகரில் கடந்த 5-ந் தேதி ஆல்டன் ஸ்டெர்லிங் (வயது 37) என்ற கருப்பர், வெள்ளை இன போலீஸ் அதிகாரிகளால் சுட்டுக்கொல்லப்பட்டார். மறுநாள் மின்னசோட்டா மாகாணத்தில் செயிண்ட் பால் என்ற இடத்தில் பிலாந்தோ காஸ்டைல் என்ற கருப்பரும் சுட்டுக்கொல்லப்பட்டார். இவ்விரு சம்பவங்களும் ஆப்பிரிக்க அமெரிக்கர்கள் மத்தியில் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தி உள்ளது.
இந்த சம்பவங்களை கண்டித்த அமெரிக்க ஜனாதிபதி ஒபாமா, கருப்பின அமெரிக்கர்கள் அடிக்கடி போலீசாரால் கொல்லப்படுவதற்கு, நியாயமான எண்ணங்களை கொண்ட அனைவரும் கவலைப்பட வேண்டும். இத்தகைய பாரபட்ச மனநிலையை போலீசார் வேரடி மண்ணாக விட்டொழிக்க வேண்டும், என்றார்.
இதற்கிடையே இரு ஆப்பிரிக்க அமெரிக்கர்கள் படுகொலைக்கு கண்டனம் தெரிவித்து அமெரிக்கா முழுவதும் போராட்டங்கள் நடைபெற்று வருகின்றது. டெக்சாஸ் மாகாணம், டல்லாஸ் நகரில் நேற்று இரவு கண்டன போராட்டம் ஒன்று நடந்து கொண்டிருந்தது. போராட்டம் நடத்தியவர்கள் பேரணியாக சென்று கொண்டிருந்தபோது, திடீரென உயரமான ஒரு இடத்தில் இருந்து துப்பாக்கி ஏந்திய 2 நபர்கள் தாக்குதல் நடத்தினர்.
அவர்கள் போலீசாரை நோக்கி சரமாரியாக சுடத் தொடங்கினர். இதனால் பேரணியில் பதற்றம் உருவானது. மக்கள் நாலா பக்கமும் சிதறி ஓடத் தொடங்கினர். இந்த சம்பவத்தின்போது 11 போலீசார் துப்பாக்கியால் சுடப்பட்டனர். 5 போலீஸ் அதிகாரிகள் உயிரிழந்தனர். குண்டு பாய்ந்து 6 பேர் படுகாயம் அடைந்தனர். அவர்கள் உடனடியாக மீட்கப்பட்டு மருத்துவமனைக்கு ஆம்புலன்சுகளில் அனுப்பி வைக்கப்பட்டனர். 

மருத்துவமனையில் அவருக்கு தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது, அவர்களில் சிலரது நிலை, கவலைக்கிடமாக உள்ளதாக தகவல்கள் கூறுகின்றன. பின்னர் தாக்குதல் நடத்திய நபர்களில் ஒருவர் போலீசாரால் கைது செய்யப்பட்டு காவலில் வைக்கப்பட்டதாகவும், மற்றொருவர் சரண் அடைந்துள்ளதாகவும் டல்லாஸ் போலீஸ் விடுத்துள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டது. இச்சம்பவத்தில் சந்தேகத்தின் பெயரில் மொத்தம் 3 பேரை போலீசார் காவலில் எடுத்து உள்ளனர். போலீசாருடன் துப்பாக்கி சூட்டில் ஈடுபட்ட 4 வது சந்தேகத்திற்குரியவர் தன்னைத் தானே சுட்டு தற்கொலை செய்து கொண்டதாக தெரியவந்து உள்ளது. 

போலந்து நாட்டில் வார்சா நகரில் நேட்டோ மாநாட்டில் கலந்து கொள்ள சென்றிருக்கும் அமெரிக்க ஜனாதிபதி ஒபாமாவிடம், இந்த துப்பாக்கிச்சூடு சம்பவம் குறித்து விளக்கப்பட்டுள்ளது. இச்சம்பவத்திற்கு அவர் கடும் கண்டனம் தெரிவித்து உள்ளார்.  dailythanthi.com

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக