வெள்ளி, 8 ஜூலை, 2016

போதை பொருள் கடத்தலில் ஆளுநர் ரோசாவின் மகன்?

வருமான வரித்துறையினர் தமிழ்நாடு, ஆந்திரா, தெலங்கானா பகுதிகளில் உள்ள பான், குட்கா, மசாலா தயாரிப்பாளர்கள், விற்பனையாளர்கள், விநியோகஸ்தர்கள் வீடுகள், கடைகள், சேமிப்பு கிடங்குகளில் சோதனை நடத்தினர். சென்னைக்கு அருகில் உள்ள திருவள்ளூர் மாவட்டத்தைச் சேர்ந்த சென்குன்றம் பகுதியில் மட்டும் 7 இடங்களில் சோதனை நடத்தப்பட்டது. இந்த சோதனையின் போது 100 கோடி ரூபாய்க்கு மேல் வரி ஏய்ப்பு செய்யப்படிருப்பதும், சட்டத்துக்கு விரோதமாக பல கிடங்குகளும், நிறுவனங்களும் நடைபெற்று வருவதும் கண்டறியப்பட்டது. இதில், தெலங்கானா மாவட்டத்தில் சோதனை நடத்தப்பட்ட போதைப்பொருள் கிடங்கு ஒன்று தமிழக ஆளுநர் ரோசய்யாவின் மகனுக்கு சொந்தமானது என்று தகவல்கள் வருகிறது.

நேற்று சென்னை, தண்டையார்பேட்டையைச் சேர்ந்த ஒன்பதாவது படிக்கும் மாணவர் ஒருவர் கடந்த ஆறு மாதமாக போதை சாக்லேட் பயன்படுத்தியதால் கடுமையாக உடல்நலம் பாதிக்கப்பட்டார். தற்போது அவர் எழும்பூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். இந்த சம்பவத்திற்கு பிறகு சென்னை மற்றும் சுற்றுப்பகுதிகளில் போதைப்பொருள் தடுப்பு பிரிவினரும், காவல்துறையினரும் அதிரடி சோதனையில் ஈடுபட்டனர். minnambalam.com

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக