வெள்ளி, 8 ஜூலை, 2016

நந்தினியின் இறுதி ஊர்வலத்தின்போது மூடப்பட்ட டாஸ்மாக் கடைக்கு பாதுகாப்பு

நந்தினியின் இறுதி ஊர்வலம் நடைபெற்ற சாலையில் இருந்த டாஸ்மாக் கடைக்கு போடப்பட்டிருந்த போலீஸ் பாதுகாப்பு. | படங்கள்: க.ஸ்ரீபரத் நந்தினியின் இறுதி ஊர்வலம் நடைபெற்ற சாலையில் இருந்த டாஸ்மாக் கடைக்கு போடப்பட்டிருந்த போலீஸ் பாதுகாப்பு. | படங்கள்: க.ஸ்ரீபரத் நந்தினியின் இறுதி ஊர்வலத்தின்போது அசம்பாவிதங்கள் ஏற்படாமலிருக்க பட்டினப்பாக்கம் டாஸ்மாக் கடை நேற்றைய தினம் மூடப்பட்டது. பட்டினப்பாக்கத்தை சேர்ந்த தனியார் பள்ளி ஆசிரியை நந்தினி, கொள்ளையனை துரத்தியபோது ஏற்பட்ட விபத்தில் கடந்த 4-ம் தேதி மரணமடைந்தார். கொள்ளையனை பொது மக்கள் மடக்கிப் பிடித்து காவல் துறையிடம் ஒப்படைத்தனர். சம்பவத்தின் போது, கொள்ளையன் மது அருந்திய நிலையில் இருந்ததை காவல்துறை உறுதி செய்தது.
இச்சம்பவம் நடந்த இடத்துக்கு அருகே டாஸ்மாக் மதுபானக் கடை ஒன்று உள்ளது. இந்தக் கடையில் மது அருந்தும் பலர் பெண்களை கேலி செய்வதோடு, சமூக விரோத செயல்களிலும் ஈடுபடுவதாக புகார் எழுந்தது. இதனடிப்படையில், அந்தக்கடையை மூட வேண்டும் என்று பட்டினப்பாக்கத்தை சேர்ந்த பெண்கள் நேற்று முன்தினம் சாலை மறியலில் ஈடுபட்டனர். ஒரு சிலர் அந்தக் கடைக்கு பூட்டுப் போட்டனர்.
இந்தச் சூழலில், நந்தினியின் இறுதி ஊர்வலம் நேற்று காலை 11 மணியளவில் நடந்தது. நந்தினியின் உடலை சீனிவாசபுரத்தில் உள்ள அவரது வீட்டிலிருந்து கடற்கரை சாலை, லூப் சாலை, வழியாக கிருஷ்ணாம்பேட்டை சுடுகாட்டுக்கு எடுத்துச் சென்றனர்.
நந்தினியின் உடல் எடுத்துச் செல்லப்பட்ட வழியில்தான் பட்டினப் பாக்கம் டாஸ்மாக் கடை இருந்தது. அந்த நேரத்தில் கடையை திறந்தால், பொதுமக்கள் தாக்குதல் நடத்தக்கூடும் என்று ஊகித்த போலீஸார், நேற்று கடையை திறக்க அனுமதிக்கவில்லை. மேலும் நூற்றுக்கும் மேற்பட்ட போலீஸார் அந்தக் கடைக்கு பாதுகாப்பு அளித் தனர்.
மயிலாப்பூர் காவல் துணை ஆணையர் பாலகிருஷ்ணன் பாதுகாப்பு பணிகளை ஆய்வு செய்தார். பட்டினப்பாக்கம் டாஸ்மாக் கடை மதியம் 12 மணிக்கு திறக்கப்படாததால், சிலர் ஏமாற்றத்துடன் திரும்பி சென்றனர். நந்தினியின் இறுதி ஊர்வலத்தின் போது ஒட்டுமொத்த சீனிவாசபுரமே கண்ணீரில் மிதந்தது.  tamithehindu.com

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக