சனி, 30 ஜூலை, 2016

யாகூப் மேமனோடு தூக்கிலடப்பட்ட பதிலில்லா கேள்விகளில் சில!

1) ஒரு குற்றவாளி இத்தனை முறை தான் கருணை மனு விண்ணப்ப முடியும் என்று இந்திய அரசியல் அமைப்பு சட்டத்தில் குறிப்பிடப்பட்டுள்ளதா?
2) சத்ருகன் சவுகான் தீர்ப்புப்படி கருணைமனு தள்ளுபடி செய்யப்பட்ட நாளிலிருந்து தூக்குத் தண்டனை நிறைவேற்றப்படும் நாள் வரைக்கும் 14 நாட்கள் உறுதியளிக்கப்பட்டுள்ளதை ஏன் பின்பற்றவில்லை?
3) கருணை மனுவின் எண்ணிக்கை மீதான கட்டுப்பாடின்மையை முறைப்படுத்த உச்ச நீதிமன்றம் ஏதேனும் வழிகாட்டுதல்களை வழங்கியிருக்கிறதா? கண்டிப்பாக இல்லை. ஏனெனில் அவ்வாறு செய்வது இந்திய அரசியலமைப்பிற்கு எதிரானதாகும்.
4) யாகூப் மேமன் அண்மையாக அளித்த கருணை மனுவில், ஏற்கனவே அவரது கருணை மனுவை பரிசீலித்து 2014-இல் தான் வழங்கியதே இறுதியான முடிவு எனக் குடியரசுத் தலைவர் குறிப்பிட்டிருந்தாரா?

5) ஒரு வேளை யாகூப் மேமனின் அண்மை மனுவை குடியரசுத் தலைவர் புதிய, தனி மனுவாக கருதியிருக்கும் பட்சத்தில், உச்ச நீதிமன்றமும் அவரது கருணை மனுவை அவ்வண்ணமே கருதி சத்ருகன் சவுகான் தீர்ப்பின் அடிப்படையில் 14 நாட்கள் இடைவெளி வழங்கியிருக்க வேண்டாமா?
6) யாகூப் மேமனின் தூக்குத் தண்டனைக்கு எதிரான நீதிப்பேராணை மனுவை விசாரித்த நீதியரசர் திரு. அணில் ஆர். தவே அவர்கள் மேமனின் வழக்கறிஞர்களை பார்த்து நீங்கள் யாரை காப்பாற்ற முயல்கிறீர்கள் எனத் தெரிகிறதா என்று கேட்ட கேள்வி, யாகூப் மேமனிற்கு நியாமான வாய்ப்பு வழங்கப்பட்டதா என்ற சந்தேகத்தையே உருவாக்குகிறது.
7) விடியற்காலை 3:30 மணிக்கு உச்ச நீதிமன்றம் யாகூப் மேமனின் வழக்கை விசாரித்ததால் அவருக்கு நீதி வழங்கப்பட்டது என எண்ணலாமா இல்லை 14 நாட்கள் இடைவெளி வழங்காததால் நீதி மறுக்கப்பட்டது என்று கொள்ளலாமா?.  முகநூல் பதிவு : கிருபா முனுசாமி

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக