ஞாயிறு, 12 ஜூன், 2016

ஆஸ்கருக்கு செல்லும் "கோர்ட்" ! நீதித்துறையின் அவலத்தை...சென்னையில் இன்று திரையிடப்படுகிறது ... சர்வதேச விழாக்களில் விருதுகளை குவித்த

ஆஸ்கார் போட்டிக்கு இப்படம் இந்தியா சார்பில் தெரிவாகி உள்ளது .வெனிஸ் திரைப்பட விழா உட்பட பல சர்வதேச திரைப்பட விழாக்களில் கலந்துகொண்டு தேசிய விருது உட்பட பல விருதுகளை வாங்கிக் குவித்த படம் ‘கோர்ட்’. இந்திய நீதித்துறையின் அவலத்தை பதிவு  செய்யும் இப்படம் சென்னையில் வருகிற 18ம் தேதி ‘மறுபக்கம்’ என்கிற அமைப்பால் திரையிடப்படுகிறது. அனுமதி இலவசம். இயன்றவர்கள் படம் பார்த்துவிட்டு தங்கள் பங்களிப்பை செலுத்தி இதுபோன்ற திரையிடல்களை ஊக்குவிக்கலாம். ஓவியர் டிராட்ஸ்கி மருது, ஒளிப்பதிவாளர் செழியன், இயக்குநர் பிரசன்னா ராமசாமி, எழுத்தாளர் கவுதம சித்தார்த்தன், பத்திரிகையாளர் கவின்மலர் போன்றோர் சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொள்கின்றனர். முகவரி: எம்.எம் பிரிவியூ தியேட்டர், தி நகர் (கோடம்பாக்கம் ஃபிளை ஓவர் அருகில்) தொடர்புக்கு: 9940642044; 8695279353

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக