வெள்ளி, 3 ஜூன், 2016

கலைஞர் உருவாக்கிய ஒவ்வொரு திமுக தொண்டரும் ஒவ்வொரு கலைஞர் கருணாநிதிதான்

அய்யா கலைஞர் அவர்களே ! லட்சக்கணக்கான அல்லது கோடிக்கணக்கான திமுக தொண்டர்களை எல்லாம் உங்களை போலவே சிந்திக்கும் ஒரு குட்டி கலைஞர் கருணாநிதிகளாக உருவாக்கி விட்டீர்கள் அய்யா.
காந்தியின் எத்தனை சீடர்கள் காந்தி மாதிரியே சிந்திக்க தொடங்கினார்கள்?
ஐன்ஸ்டீனின் மாணவர்கள் எத்தனை பேர் ஐன்ஸ்டீன் மாதிரி சிந்தித்தார்கள்?
கலைஞரின் கருத்துக்களை உள்வாங்கியே தனது சமுக அரசியல் அறிவை வளர்த்துக்கொண்ட  தொண்டர்கள் எல்லாருமே தற்போது கலைஞர் போலவே சிந்திக்கிறார்கள்.
ஒரு விடயத்தை பற்றி கலைஞர் என்ன சொல்லியிருக்கிறார் என்று படிக்க தொடங்கும் முதலே ஒரு அடிமட்ட திமுக தொண்டனிடம் கேட்டால் அவன் கலைஞர் என்ன சொல்லியிருப்பார் என்று ஊகித்தே சொல்லிவிடுவான்.
அது மிகவும் சரியாகவும் இருக்கும்.
அந்த அளவு கலைஞரின் சிந்தனை செயல் எல்லாமே வகுத்துக்கொண்ட கொள்கை அடிப்படையிலேயே இருக்கும்.
இப்படி ஒரு ஆழமான கொள்கை பிடிப்புள்ள முதறிஞர் இன்று வேறு யார்?
கலைஞர் தமிழகத்துக்கு மட்டும் அல்ல உலகில் எங்கெங்கு தமிழர்கள் வாழ்கிறார்களோ அங்கெல்லாம் கலைஞர்தான் காவல் நாயகன்.
பல நாடுகளில் வாழும் தமிழர்களின் உள்ளூர் பகைவர்கள் கலைஞரை வெறுப்பது போல வேறு எந்த இந்திய தலைவரையும் வெறுத்ததில்லை. அது ஏன்?

எண்ணிக்கையில் தமிழர்கள்  மிக சிறுபான்மையாக இருந்தாலும் இவர்களுக்கு ஒரு பலமான குரல் தமிழ்நாட்டில் இருக்கிறதே? அது கலைஞரின் குரல்.
சந்தேகம் இருந்தால் மலேசியாவில் இருந்து இலங்கை ஊடாக மத்திய கிழக்கு வரை உள்ளவர்களை கேட்டு பாருங்கள்?
தாழ்த்தப்பட்டஎந்த மாநில  மனிதனையும் கேட்டு பாருங்கள் அவனது நம்பிக்கை நட்சத்திரங்கள் பட்டியலில் கலைஞரின்   பெயர்   பொறிக்கப்பட்டு இருக்கும்.

 சமுகநீதிக்கு மறைந்த பிரதமர் விபி சிங்கிற்கு பின்புலமாக அன்று நின்றது கலைஞர் என்பது வரலாறு. 
சமூகநீதி  கோட்பாடுகளால் முன்னேற தொடங்கி இருக்கும்  விந்தியத்துக்கு அப்பால் உள்ள வடநாட்டு  அடித்தட்டு மக்கள் மனதில் தந்தை பெரியாரும் அண்ணாவும் கலைஞரும்  மாறாத இடத்தை பெற்றுள்ளார்கள்.
அந்த  சமூகநீதி பாரம்பரியத்தின்  வாழும்  நம்பிக்கை நட்சத்திரம் கலைஞர் கருணாநிதி.
கம்யுனிஸ்ட் கட்சியின் முப்பது ஆண்டுகள் ஆட்சிக்கு பின்பும் கூட மனிதனை மனிதன் இழுக்கும் ரிக்சா இன்னும் அங்கு ஒழியவில்லை.
1971  இலேயே மனிதனை மனிதன் இழுக்கும் கொடுமையை ஒழித்தது கலைஞர்.
காட்ராக்ட் சிகிச்சை செய்வது மிகப்பெரும் செலவு.. ஏழைகளுக்கு எட்டாது .. அதை அன்றே ஒழித்து ஏழைகளின் வாழ்வில் ஒளி ஏற்றியது கலைஞர்.
பிச்சை எடுப்பவர்களுக்கு மறுவாழ்வு கொடுத்து அடுக்கு மாடிகளில் குடியிருந்தியது கலைஞர்.
இது போன்ற சாதனைகள் பட்டியல் மிகபெரியது.

சாதனைகளுக்கு எல்லாம் சிகரம் வைத்தது போல கலைஞர் ஒவ்வொரு தொண்டரையும் தன்னை போலவே சிந்திக்கும் ஒரு  குட்டி கலைஞர் ஆகவே உருவாக்கி உள்ளார்.

அத்தனை திமுக தொண்டரும் கலைஞர் கருணாநிதிதான் இதுதான் இனி தமிழகம் காணப்போகும் மிகபெரும் புரட்சி.
இந்த 93 வயதில் கலைஞர் அய்யா அவர்கள் மேலும் பல்லாண்டு பல்லாண்டு வாழ்க என்று வாழ்த்துகிறோம்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக