வெள்ளி, 3 ஜூன், 2016

ஆயத்த ஆடை நிறுவன அதிபர் குடும்பத்துடன் தற்கொலை?

தாமரைக்கண்ணன், மனைவி மற்றும் மகன்களுடன்.
தாமரைக்கண்ணன், மனைவி மற்றும் மகன்களுடன்.
திருப்பூர் மாவட்டம் பல்லடம் அருகே கணபதிபாளையத்தில் ஆயத்த ஆடை நிறுவனம் நடத்தி வந்த ஒருவர் தனது மனைவி, மகன்களுடன் சடலமாக மீட்கப்பட்டார். இவர்கள் அனைவரும் தற்கொலை செய்து கொண்டிருக்கலாம் என போலீஸார் அஞ்சுகின்றனர்.
கணபதிபாளையத்தைச் சேர்ந்தவர் தாமரைக்கண்ணன். அவரது மனைவி பிரபாவதி. மகன்கள் தனுஷ். மற்றும் அனுஷ்.

தாமரைக்கண்ணன் ஆயத்த ஆடை தொழில் செய்து வந்தார். இவர் மீது கடந்த வாரம் ரூ.3 கோடி பண மோசடி வழக்கு தொடரப்பட்டுள்ளது.
இந்நிலையில் இன்று (வெள்ளிக்கிழமை) தாமரைக்கண்ணன் அவரது மனைவி, மகன்களுடன் தூக்கில் தொங்கியபடி சடலமாக மீட்கப்பட்டனர்.
இது தற்கொலைதானா இல்லை பின்னணியில் வேறு ஏதும் பிரச்சினை இருக்கிறதா என்ற கோணத்தில் பல்லடம் போலீஸார் விசாரணை செய்து வருகின்றனர்.  தமில்தேஹிண்டு.com

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக