வெள்ளி, 3 ஜூன், 2016

பாரிஸ் வெள்ளம்... வரலாறு காணாத பெருமழை.. அணைகள் உடையும் அபாயம்

பாரீஸ்: பிரான்ஸ் தலைநகர் பாரீஸ் பெரும் வெள்ளக்காடாகியுள்ளது. தொடர்ந்து பெரும் மழை பெய்து வருவதால் நகரமே மூழ்கியுள்ளது. மேலும் செய்ன் நதியில் வெள்ளப் பெருக்கு அதிகரித்து வருவதாலும் அது பல இடங்களில் உடையும் அபாயம் பெருகி வருவதாலும் மக்களிடையே பெரும் அச்சம் நிலவுகிறது.
செய்ன் நதிக் கரை பெரிய அளவில் உடைந்தால் மிகப் பெரிய பேரவலம் ஏற்படும் நிலை காணப்படுகிறது. தொடர்ந்து மழை பெய்யும் என வானிலை மையம் அறிவித்துள்ளதால் பாரீஸ் வெள்ள நிலைமை மேலும் மோசமடையும் என்று தெரிகிறது.
பாரீஸ் முழுவதும் வெள்ளம் சூழ்ந்துள்ளது. பாலங்கள், ரயில் நிலையங்கள், சாலைகள், விமான நீலையம் ஆகியவை நீரில் மூழ்கியுள்ளன. ஈபிள் டவர் பகுதியில் பெரிய அளவில் வெள்ளம் ஓடிக் கொண்டிருக்கிறது. முக்கிய சுற்றுலாத் தலங்கள் மூடப்பட்டுள்ளன.


ஆயிரக்கணக்கானோர் பாதிப்பு வெள்ளத்தில் சிக்கித் தவித்த 3000க்கும் மேற்பட்டோர் மீட்கப்பட்டுள்ளனர். ஆயிரக்கணக்கானோர் வீடுகளில் சிக்கியுள்ளனர். பெரும்பாலான பகுதிகளில் மின்சாரம் இல்லை. பல இடங்களில் உணவுப் பொருட்கள் கிடைக்காத நிலை காணப்படுகிறது.
மியூசியங்கள் மூடல் உலகப் புகழ் பெற்ற லூவர் மற்றும் ஆர்சே அருங்காட்சியகங்கள் மூடப்பட்டுள்ளன. அங்குள்ள விலை மதிப்பில்லாத கலைப் பொருட்கள் பாதுகாப்பான இடங்களுக்குக் கொண்டு செல்லப்பட்டுள்ளன.
11 பேர் பலி இதுவரை வெள்ளத்தில் சிக்கி 11 பேர் உயிரிழந்துள்ளனர். ஆயிரக்கணக்கானோர் வீடுகளை இழந்து ஆதரவற்ற நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளனர். இந்த வார இறுதி வரை பிரான்ஸ் முதல் உக்ரைன் வரை கன மழை பெய்யும் என்று எச்சரிக்கப்பட்டுள்ளது.
அடுத்த 24 மணி நேரத்தில் அடுத்த 24 மணி நேரத்தில் 50 மில்லி மீட்டர் அளவிலான மழை பெய்யும் என்றும் வானிலை ஆய்வாளர்கள் எச்சரித்துள்ளனர். இதனால் வெள்ள நிலைமை மேலும் மோசமடையும் நிலை காணப்படுகிறது
ஜெர்மனி - பெல்ஜியம் பிரான்ஸ் தவிர ஜெர்மனி, பெல்ஜியம், ஆஸ்திரியா, நெதர்லாந்து, போலந்து ஆகிய நாடுகளும் இந்த பெரும் மழையால் பாதிக்கப்பட்டுள்ளனர். ஜெர்மனிதான் பெரும் பாதிப்பை சந்தித்துள்ளதாம்.

Read more at://tamil.oneindia.com

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக