வெள்ளி, 3 ஜூன், 2016

எனது மகனின் கதி என்னவென்று தெரியவில்லை: பாரிவேந்தர் சந்திக்க மறுப்பு

மதன் தாயார் பேட்டி வேந்தர் மூவிஸ் நிறுவனர் மதன் கடந்த சில தினங்களுக்கு முன்பு மாயமானார். அவர் எழுதியுள்ளதாக கடிதம் வாட்ஸ் அப்பில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது. இதையடுத்து அவரது உறவினர்கள் போலீசில் புகார் அளித்தனர். மதன் எஸ்.ஆர்.எம். கல்வி நிறுவனத்தின் பாரிவேந்தருக்கு நெருக்கமாக இருந்தவர். இந்த நிலையில் இன்று சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய மதன் தாயார் தங்கம், எனது மகனின் கதி என்ன ஆனது என்று இதுவரை தெரியவில்லை. இது தொடர்பாக போலீசில் புகார் அளித்துள்ளோம். முதல் அமைச்சரின் தனிப் பிரிவில் மனு அளித்துள்ளோம். மதன் கிடைக்க ஊடங்கள் உதவி செய்ய வேண்டும். எனது மகன் எழுதிய கடிதத்தில் யாருக்கும் மிரட்டல் விடுக்கவில்லை. பாரிவேந்தர், ரவி, மதன் ஆகியோரிடையே எழுந்த பணிப் பூசல் காரணமாக மதன் மாயமாகியிருக்கலாம். எஸ்.ஆர்.எம். கல்வி குழும நிறுவனர் பாரிவேந்தர் எங்களை சந்திக்க மறுத்துவிட்டார். எனது மகன் எந்த தவறும் செய்யவில்லை. இந்த ஆண்டு மாணவர்கள் தந்த பணம் எஸ்.ஆர்.எம். நிறுவனத்திடம் தான் உள்ளது என்று மதன் கூறியுள்ளார் என்றார்நக்கீரன்,in

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக