ஞாயிறு, 22 மே, 2016

புதுச்சேரி துணை நிலை ஆளுனராக கிரண் பேடி நியமனம்


டெல்லி சட்டப்பேரவைத் தேர்தலில் பாஜக-வின் முதல்வர் வேட்பாளராகப் போட்டியிட்டு படுதோல்வி கண்டார். புதுச்சேரிகென்று பிரத்யேகமாக துணைநிலை ஆளுநர் இதுவரை நியமிக்கப்படவில்லை, அந்தமான் நிகோபார் துணைநிலை ஆளுநர் ஏ.கே.சிங் கூடுதல் பொறுப்பாக கவனித்து வந்தார். இந்நிலையில் புதுச்சேரியில் 17 இடங்கள் வெற்றியுடன் காங்கிரஸ்-திமுக கூட்டணி ஆட்சியைக் கைப்பற்றியுள்ள நிலையில் துணைநிலை ஆளுநராக கிரண் பேடி நியமிக்கப்பட்டுள்ளது கவனிக்கத்தக்கது.


ஏற்கெனவே டெல்லியில் முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவாலுக்கும் துணைநிலை ஆளுநருக்கும் கடும் மோதல் போக்கு இருந்து வரும் நிலையில் தற்போது கிரண் பேடியை புதுச்சேரி துணைநிலை ஆளுநராக நியமித்துள்ளது புதுச்சேரியில் அமையவிருக்கும் புதிய ஆட்சியில் எந்த விதமான தாக்கத்தை ஏற்படுத்தும் என்பது போகப் போகவே தெரியும் என்று அரசியல் நோக்கர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.tamil.thehindu.com

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக