ஞாயிறு, 22 மே, 2016

Egypt Air விபத்துக்கு எல்லா சாத்தியக்கூறுகளுக்கும் வாய்ப்பு

வியாழக்கிழமை நடைபெற்ற ஈஜிப்ட்ஏர் விமான விபத்து தொடர்பாக எல்லா சாத்தியக்கூறுகளுக்கும் வாய்ப்பு இருக்கிறது என்று எகிப்திய அதிபர் அப்துல் ஃபத்தாக் அல் சிசி தெரிவித்திருக்கிறார். எகிப்திய அதிபர் அப்துல் ஃபத்தாக் அல் சிசி இதற்கான புலனாய்வு நீண்டகாலம் பிடிக்கும் என்று கூறிய அல் சிசி, 66 பேர் பலியான இந்த விபத்திற்கான காரணங்களை ஊகிக்க வேண்டாம் என ஊடகங்களை கேட்டுக்கொண்டுள்ளனார். கவுன்சில் கூட்டம் தாங்கள் அணுகி ஆராய்ந்து வருகின்ற தரவுகளிலிருந்து தற்போது முடிவுகளை எட்டுவதற்கான காலம் இன்னும் முதிரவில்லை என்று எகிப்திய புலனாய்வாளர்கள் சனிக்கிழமை கூறியுள்ளனர்.
எம்.எஸ்804 விமானம் பறந்தது தெரிந்த கடைசி இடம் மற்றும் பாகங்கள் கிடைத்த இடம் விமானத்தின் முக்கிய உடல் பாகத்தையும், விமானப் பயணத் தரவுகள் மற்றும் விமானிகள் அறை தொடர்பலைகளை அறிய தருகின்ற இரண்டு கறுப்பு பெட்டிகளையும் கண்டறிய தேடல் அணியினர் இன்னும் முயற்சித்து வருகின்றனர் bbc.com

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக