செவ்வாய், 3 மே, 2016

திமுகவுக்கு சைலண்டாக விஜய் ரசிகர்கள்....பல முக்கிய நடிகர்களின் ரசிகர்களும் சைலண்டாக.....

சட்டம் ஒரு இருட்டறை' படத்தின் மூலம் மக்களின் உரிமை காக்கும் நாயகனாக திரையில் தனக்கான இடத்தைப் பிடித்து தொடர்ந்து பல வெற்றிகளைப் பெற்ற விஜயகாந்த், "ரமணா' பட வெற்றிக்குப்பிறகு 2005-ல் மதுரையில் தே.மு.தி.க.வைத் தொடங்கி, அரசியல் பயணத்தை ஆரம்பித்தார். விஜயகாந்தின் அரசியல் வளர்ச்சி, "சட்டம் ஒரு இருட்டறை' படத்தில் அவரை இயக்கிய டைரக்டர் எஸ்.ஏ.சந்திரசேகருக்குள் ஏற்கனவே இருந்த அரசியல் ஆர்வத்துக்கு தூண்டுகோலானது. தன் மகன் விஜய்யை அரசியல் களத்திற்குள் இறக்கும் ஆசையைத் தூண்டியது. அதுவரை தி.மு.க.அனுதாபியாக இருந்த எஸ்.ஏ.சி., விஜய்யின் "காவலன்' படப் பிரச்சினையால் அ.தி.மு.க. பக்கம் பார்வையைத் திருப்பினார். 2011 தேர்தலில் விஜய் ரசிகர் மன்றத்திற்கு சில தொகுதிகளை அ.தி.மு.க. தலைமையிடம் எதிர்பார்த்தார், அது நடக்காவிட்டாலும் தானே வலியப் போய் அ.தி.மு.க.வுக்காக பிரச்சாரம் செய்யத் துவங்கினார்.

விஜய்யின் ரசிகர்களும் மன்றக் கொடியுடன் அ.தி.மு.க.வுக்கு ஆதரவு திரட்டினர். தேர்தலில் அ.தி.மு.க. வெற்றி பெற்றது. “""ராமருக்கு பாலம் கட்டிய அணில் போல், ஜெயலலிதா வெற்றியில் எங்களுடைய பங்கும் இருக்கிறது’’ என ஓப்பன் ஸ்டேட்மென்ட் விட்டார். வழக்கம்போல் ஜெயலலிதாவுக்கு இது எரிச்சலை ஏற்படுத்தியது. ஜெ.வை சந்திப்பதற்கு தவமாய் தவம் இருந்தும் எஸ்.ஏ.சி.யின் முயற்சி பலிக்கவில்லை.

ஜெ.வின் கோபத்தை நேரடியாக உணர்ந்து கொண்ட, தயாரிப்பாளர் சங்கத் தலைவராக அதுவரை இருந்த எஸ்.ஏ.சி., அடுத்து நடந்த சங்கத் தேர்தலில் போட்டியிட வில்லை. ஜெ.வின் எரிச்சலும் எரிந்து கொண்டே இருந்தது. அ.தி.மு.க ஆட்சிக்கு வந்த 2011-ல் ஆஸ்கார் ஃபிலிம்ஸ் ரவிச்சந்திரன் தயாரித்த, விஜய்யின் "வேலாயுதம்' படத்தை ரிலீஸ் பண்ண தியேட்டர்கள் கிடைப்பதற்குள் பெரும் திண் டாட்டம் ஆகிவிட்டது.

2012 தீபாவளிக்கு "துப்பாக்கி'யை ரிலீஸ் செய்யும் நேரத்தில் சில மத அமைப்புகளால் இடைஞ் சல் ஏற்பட்ட போதும் ஜெ. அரசு கண்டு கொள்ளவில்லை. அடுத்து 2014 தீபாவளிக்கு "கத்தி'யை ரிலீஸ் பண்ணும் ஏற்பாடு களில் விஜய் இருந்தபோது, ராஜபக்சே ஆளான சுபாஷ்கரன் அல்லிராஜாவின் தயாரிப்பில் விஜய் நடிப்பதற்கு எதிர்ப்புத் தெரிவித்து போராட்டங் களில் இறங்கின சில தமிழ் உணர்வு அமைப்புகள். "கத்தி'யை ரிலீஸ் பண் ணும் தியேட்டர்களுக்கு வெடிகுண்டு மிரட்டலெல்லாம்(!) விடப்பட்டது.

அனைத்து தியேட்டர்களுக்கும் பாது காப்பு கொடுக்க முடியாது என்றது ஜெ. அரசின் போலீஸ். "டைம் டூ லீட்' என்ற ஒரு வார்த்தை பட விளம்பரங் களில் இருந்ததால் ‘"தலைவா' படத்தை ரிலீஸ் பண்ணுவதற்குள் போதும் போதும் என்றாகிவிட்டது விஜய்க்கு.""இந்த அஞ்சு வருஷ ஜெய லலிதா ஆட்சியில நாலு  படங்களை ரிலீஸ் பண்ணுவதற்குள் விஜய் படாத பாடு பட்டுவிட்டார்.

"காவலன்' பட ரிலீசின் போது சின்ன மனத்தாங்கல் தான், அதைக்கூட தலைவரிடம் (அப் போது முதல்வராக இருந்த கலைஞர்) எஸ்.ஏ.சி.நேரடியா சந்தித்து சொல்லியிருந்தார்னா பிரச்சினை முடிஞ்சிருக்கும். ஆனா ஜெயலலிதா குணம் தெரியாமப் போய் மாட்டிக்கிட்டு முழிக்கி றாங்க அப்பாவும் மகனும்'' என்கிறார் தி.மு.க.வின் சீனியர் தலைவர் ஒருவர்.

இப்போது ரிலீசான "தெறி' செங்கல்பட்டு ஏரியா தியேட்டர்களில் ரிலீசாகாத தன் பின்னணியில் கூட ஆளும் கட்சியின் கைங்கர் யம் இருக்குமோ என்ற சந்தேகம் உள்ளது விஜய் ரசிகர்களுக்கு. 

தொடர்ந்து தங்களுடைய தலைவர்  விஜய்க்கு எதிரான மனநிலையில் இருக்கும் ஜெயலலிதாவுக்கு எதிராகக் களம் இறங்க வேண்டும் என்பதுதான் விஜய் ரசிகர்களின் ஆசையும் விருப்பமும். கடந்த 26-ஆம் தேதி விஜய்  நற்பணி இயக்கத்தின் அனைத்து மாவட்டத் தலைவர்கள், இளைஞரணிச் செயலாளர்களை சந்தித்துள்ளார் மாநிலத் தலைவர் புஸ்ஸி ஆனந்த். சென்னை நீலாங்கரையில் உள்ள விஜய் அலுவலகத்தில் நடந்த இந்த சந்திப்பில் ஒவ்வொரு மாவட்டத் தலைவர்களையும் தனித்தனியே அழைத்து தேர்தல் நிலவரம் குறித்துக் கேட்டுள் ளார் ஆனந்த்.

""இந்த முறை நமது கொடியை பயன்படுத்தாமல், தி.மு.க.வுக்கு வேலை பார்க்கச் சொல்லியுள்ளார் நமது தளபதி(விஜய்)'' என்றிருக் கிறார் ஆனந்த். மதுரை, நாகப்பட்டினம், காஞ்சிபுரம் ஆகிய மூன்று மாவட்டத் தலைவர்கள் மட்டும் அ.தி.மு.க.வுக்கு வேலை செய்யப் போவதாகச் சொல்லியிருக்கிறார்கள். அதற்கு, ""நம் தளபதியின் தகவலை சொல்லிவிட்டேன். மற்றது உங்கள் விருப்பம்'' என்றிருக்கிறார் ஆனந்த்.

இந்த நிலையில் பிரச்சாரத்திற்காக கடந்த 29-ஆம் தேதி கோவை வந்த மு.க.ஸ்டாலினை லீ மெரிடியன் ஓட்டலில் கோவை மாவட்ட விஜய் மன்றத் தலைவர் சம்பத், மாநகரச் செயலாளர் பாபு, இளைஞரணிச் செயலாளர் யுவராஜ் ஆகியோர் சந்தித்து சால்வை அணிவித்து தங்களது ஆதரவைத் தெரிவித்துள்ளனர். ""உங்க தளபதியும் என்கிட்ட பேசினார், அதனால கவலைப்படாம நீங்க களத்தில் இறங்கி நமக்கு வேலை பாருங்க, நான் இருக்கேன் உங்களுக்கு'' என தெம்பூட்டும் விதமாக ஸ்டாலின் பேசியுள்ளதாகக் கூறுகிறார்கள் விஜய் ரசிகர் மன்றத்தினர்.
சிக்னல் கிடைத்துவிட்டது எனச் சொல்லும் விஜய் ரசிகர்கள், தேர்தல் களத்தில் இந்த  முறை கறுப்பு-சிவப்பு அணிலாக செயல்படுவார்கள் என எதிர்பார்ப்பு உள்ளது.

-ஜெ.டி.ஆர். நக்கீரன்.in

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக