செவ்வாய், 3 மே, 2016

நடிகை ரோஜாவின் அரசியல் வாழ்க்கைக்கு சவால் விடும் கந்து வட்டி தெலுங்கு தேசம்...ப்ளுபிலிம் அவதூறு..


ஆந்திர சட்டசபையில் இருந்து நடிகை ரோஜா 1 ஆண்டு சஸ்பெண்டு செய்யப்பட்டார்.
சபாநாயகரின் இந்த நடவடிக்கையை எதிர்த்து நடிகை ரோஜா ஐதராபாத் கோர்ட்டில் வழக்கு தொடர்ந்தார். ஐகோர்ட்டு தனி நீதிபதி விசாரித்து சஸ்பெண்டு உத்தரவுக்கு இடைக்கால தடை விதித்தார்.
இதையடுத்து ரோஜா சட்டசபைக்கு செல்ல முயன்றார். ஆனால் சபை காவலர்கள் அவரை அனுமதிக்க மறுத்துவிட்டனர்.
இந்த நிலையில் ஐகோர்ட்டு பெஞ்ச் ரோஜாவுக்கு சட்டசபை விதித்த சஸ்பெண்டு உத்தரவை உறுதி செய்து தீர்ப்பு வழங்கியது.
ஆனால் இந்த தீர்ப்பை எதிர்த்து நடிகை ரோஜா சுப்ரீம் கோர்ட்டில் அப்பீல் செய்து உள்ளார்.  ஊரை அடித்து உலையில் போடும் சந்திரபாபு நாயுடுவின்  கந்துவட்டி கும்பல்தான் ரோஜாவுக்கு எதிராக படு மோசமான  அரசியலை நடத்துகிறது. ரோஜா புளுபிலிமில் நடித்துள்ளார் என்று சேற்றை வாரி வீசும் நாயுடுவுக்கு எதிராக பெண் உரிமையாளர்கள் ஏன் இன்னும் மௌனமாக இருக்கிறார்கள்? பேட்டிக்கு அழைத்துவிட்டு ரோஜாவை  கேவலப்படுத்துகிறார்கள். 

அதில் ஐகோர்ட்டு தனி நீதிபதி பிறப்பித்த இடைக்கால உத்தரவுபடி தன்னை சபைக்குள் அனுமதித்து இருக்க வேண்டும். ஆனால் சபாநாயகர் கோர்ட்டு உத்தரவை மதிக்காமல் என்னை சபை வாசலில் தடுத்து விட்டார் என்று குறிப்பிட்டு இருந்தார்.
ரோஜாவின் அப்பீல் மனு நேற்று விசாரணைக்கு வரும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் கோர்ட்டு நேரம் முடிந்ததால் திங்கட்கிழமை (4–ந்தேதி), விசாரணைக்கு வருகிறது. நீதிபதிகள் கோபால்கவுடா, அருண்மிஸ்ரா ஆகியோர் கொண்ட பெஞ்ச் இதனை விசாரிக்கிறது.
இதுகுறித்து ரோஜா கூறும் போது, தனி நீதிபதி தீர்ப்பை ஏற்காமல் தன்னை சபாநாயகர் சபைக்குள் அனுமதிக்காததன் மூலம் அவர் காழ்ப்புணர்ச்சியுடன் செயல்பட்டு உள்ளார். நீதிமன்றம் மீது நான் நம்பிக்கை வைத்துள்ளேன். நிச்சயம் எனக்கு நீதி கிடைக்கும் என்ற நம்பிக்கை உள்ளது என்றார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக