திங்கள், 2 மே, 2016

அன்புநாதன் விவகாரத்தில் மோடியின் அரசு இனியும் மவுனம் சாதிப்பதா?


சென்னை;'கரூர் அன்புநாதன் விவகாரத்தில், பிரதமர் மோடியின் அரசு, இனியும் மவுனம் சாதிப்பதா என்று, நாட்டு மக்கள் கருதுகின்றனர்' என, தி.மு.க., தலைவர் கருணாநிதி தெரிவித்துள்ளார்.
அவரது அறிக்கை:கரூரில், அ.தி.மு.க., அமைச்சர்களுக்கு நெருக்கமான, அன்புநாதன் வீட்டில், வருமான வரித் துறை அதிகாரிகள், அதிரடி சோதனை நடத்தினர். இதில், 10.30 லட்சம் ரூபாய்ரொக்கம்; ஒரு ஆம்புலன்ஸ் வாகனம்; ஒரு டிராக்டர்; ஒரு கார்; 12 பணம் எண்ணும் மிஷின்கள் பறிமுதல்
செய்யப்பட்டன. காவல் துறையினரின் பார்வையிலிருந்தும் வருமான வரித் துறையினரின் பிடியிலிருந்தும், அன்புநாதன் மாயமாகியிருக்கிறார் என்றால், அதற்கு மூல காரணம்யார். அவரை தப்பவிட்ட புனிதர்கள் யார்? தமிழக அரசின் மூத்த அதிகாரிகள் துணையின்றி, அமைச்சர்களின் உதவியின்றி, அவரால், எப்படி தப்ப முடியும். இதற்கெல்லாம் பதில் என்ன?


ஆனாலும் முதல்வர், அந்த அமைச்சர்கள் பற்றி, எந்த நடவடிக்கையும் எடுக்காமல் இருப்பது, அமைச்சர்களின் தவறுகளில் முதலமைச்சருக்கும் தொடர்பு இருக்குமோ, அதனால் தான் கண்டுகொள்ளாமல் இருக்கிறாரோ என்ற எண்ணத்தையும் பரவலாக ஏற்படுத்திஇருக்கிறது.

அவர்கள் பதில் கூறுகிறார்களோ, இல்லையோ, வாக்காளப் பெருமக்கள், இந்தத் தொடர் செய்திகளையெல்லாம் நன்றாகப் படித்து, எப்படிப்பட்ட பொய்யர்கள், மோசடிப் பேர்வழிகள், ஊழலில் ஊறித் திளைத்தவர்கள், கடந்த ஐந்தாண்டு காலமாக, நம்மை ஆண்டு வருகிறார்கள்
என்பதைப் புரிந்து கொண்டு, வரும் தேர்தலில், இப்படிப்பட்ட மோசடிகளுக்கு முற்றுப்புள்ளி வைக்க முன்வர வேண்டும்.
பிரதமர் மோடியின் அரசு, இனியும் மவுனம் சாதிப்பதா என்று, நாட்டு மக்கள் கருதுவதையும், மத்திய அரசின் கவனத்திற்குக் கொண்டு வர விரும்புகிறேன்.இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.  தினமலர்.com

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக