செவ்வாய், 3 மே, 2016

பெங்களூரு இளம்பெண்ணை கடத்தும் காட்சி சிசிடிவி யில் பதிவு...


பெங்களூருவில் இளம்பெண்ணை கற்பழிக்கும் நோக்கத்துடன் மர்ம நபர் குண்டுக்கட்டாக தூக்கிச்சென்றுள்ளார். கண்காணிப்பு கேமராவில் பதிவான இந்த காட்சி வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இது தொடர்பாக அந்த மர்மநபரை போலீசார் வலைவீசி தேடிவருகிறார்கள்.& கண்காணிப்பு கேமராவில் பதிவான இந்த காட்சிகள்  தனியார் கன்னட தொலைக்காட்சிகளில் வெளியானது. அந்த காட்சிகளில் ஏப்ரல் 23-ந் தேதி இரவு தனது நண்பருடன் மோட்டார் சைக்கிளில் வந்து ராதிகா இறங்குகிறார். பின்னர் அவர் சாலையோரம் நின்று கொண்டிருக்கும்போது பின்னால் வரும் மர்மநபர், அவரை குண்டுகட்டாக அங்கிருந்து தூக்கி செல்கிறார். ராதிகாவை மர்மநபர் தூக்கி செல்வதை அப்பகுதியில் வசிக்கும் சிலர் வேடிக்கை பார்க்கிறார்கள். மேலும் மோட்டார் சைக்கிளில் செல்பவர்களும் ராதிகாவை மர்மநபர் தூக்கி செல்வதை பார்த்துவிட்டு, அவரை காப்பாற்ற முயற்சி செய்யாமல் அங்கிருந்து செல்லும் காட்சிகளும் பதிவாகி உள்ளது.

இந்த சம்பவம் நள்ளிரவில் நடக்கவில்லை. இரவு 9.30 மணியில் இருந்து 10 மணிக்குள் தான் அரங்கேறி உள்ளது. அத்துடன் இளம்பெண்ணை மர்மநபர் கற்பழிக்க தூக்கிச் செல்வதும், அவரை காப்பாற்ற யாரும் முன்வராதது போன்ற காட்சிகள் வெளியாகி இருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. 

இதுகுறித்து பெங்களூரு மாநகர போலீஸ் கமிஷனர் என்.எஸ்.மேகரிக் நேற்று நிருபர்களிடம் கூறுகையில், “இளம்பெண்ணை மர்மநபர் தூக்கிச் சென்று கற்பழிக்க முயன்ற சம்பவம் குறித்து, தனியார் தங்கும் விடுதியின் உரிமையாளர் மஞ்சுநாத் கொடுத்த புகாரின் பேரில் சி.கே.அச்சுக்கட்டு போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். இந்த சம்பவம் தொடர்பாக அந்த இளம்பெண் எந்த புகாரையும் போலீஸ் நிலையத்தில் கொடுக்கவில்லை. தற்போது மஞ்சுநாத் கொடுத்த புகாரின் பேரிலேயே வழக்குப்பதிவு செய்யப்பட்டு இருக்கிறது. 

பாதிக்கப்பட்ட பெண் புகார் கொடுத்தும் போலீசார் வழக்குப்பதிவு செய்யவில்லை என்றால், அதுபற்றி உரிய விசாரணை நடத்தப்படும். அப்போது தவறு செய்த போலீசார் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும். இந்த சம்பவத்தில் தொடர்புடைய மர்மநபரை பிடிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது,“ என்றார்.  தினமலர்.com

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக