வியாழன், 19 மே, 2016

ஸ்டாலின் :வரலாற்றில் மிகபெரும் எதிர்கட்சியாக திமுகவை மக்கள் தெரிவு செய்துள்ளார்கள் ....மகிழ்ச்சியே

சென்னை : தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில் திமுகவுக்கு சற்றேறக் குறைய 100 தொகுதிகள் கிடைத்துள்ளன. திமுக 50 தொகுதிகளில் வெற்றி பெற்று 50 தொகுதிகளில் முன்னிலையில் உள்ளது.  எனவே, தமிழக சட்டப்பேரவையில் பெரும்பான்மை தொகுதிகளுடன் திமுக எதிர்க்கட்சி வரிசையில் அமர உள்ளது. இது குறித்து கருத்துத் தெரிவித்த திமுக பொருளாளர் மு.க. ஸ்டாலின், சட்டப்பேரவை வரலாற்றில் இவ்வளவு பெரும்பான்மையுடன் ஒரு எதிர்க்கட்சியாக திமுகவை தமிழக மக்கள் அமர்த்தியிருக்கிறார்கள்.
திமுகவுக்கு இந்த ஒரு பெருமையை மக்கள் உருவாக்கிக் கொடுத்திருக்கிறார்கள் என்பதில் மகிழ்ச்சியே என்று கூறியுள்ளார் தினமணி.காம்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக