வியாழன், 19 மே, 2016

அழகிரி :நான் யாருக்கும் ஆதரவளிக்கவில்லை... மீண்டும் இணைவது பின்பு முடிவு செய்வேன்

மு.க.அழகிரி | கோப்புப் படம்திமுக தோற்றதற்கு தென் மாவட்டங்களில் தாம் பொறுப்பில் இல்லாததே காரணம் என்று மு.அழகிரி கூறியுள்ளார். இது தொடர்பாக அவர் அளித்த பேட்டி ஒன்றில், "சட்டப்பேரவைத் தேர்தல் முடிவுகள் குறித்து நான் எந்த ஒரு கருத்தும் சொல்ல விரும்பவில்லை. திமுக தோற்றதற்கு தென் மாவட்டங்களில் நான் இல்லாதது காரணம்தான். நான் இருந்திருந்தால் இந்தளவுக்கு பாதிப்பு இருக்காது.
ஒரு வலுவான கூட்டணி அமைக்காதது மற்றும் திமுக தலைமைதான் என்னை வேண்டாம் என்று ஒதுக்கியதால் இந்த மாபெரும் தோல்வியை சந்தித்தார்கள். திமுகவில் வேட்பாளர்கள் சரியில்லை மற்றும் உட்கட்சி பிரச்சினை இருக்கிறது. திமுகவின் இந்தத் தோல்விக்கு யார் பொறுப்பு என்று அனைவருக்கும் தெரியும். இந்த சட்டப்பேரவைத் தேர்தலில் நான் யாருக்கும் ஆதரவு அளிக்கவில்லை என்பதுதான் என் நிலை" என்று தெரிவித்திருக்கிறார் அழகிரி மீண்டும் திமுகவில் இணைவீர்களா என்ற கேள்விக்கு, "மீண்டும் இணைவது குறித்து பின்னர் யோசித்து முடிவு செய்வேன்" என்று பதிலளித்துள்ளார். tamil.thehindu.com

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக