புதன், 18 மே, 2016

பெங்களூரு பி வி ஆர் திரையரங்கில் திருட்டு விசிடியாம்....விஷால் ரெட்டி குற்றச்சாட்டு

பெங்களூரு பிவிஆர் திரையரங்கில் தமிழ் திரைப்படங்களின் திருட்டு விசிடிகள் தயாரிக்கப்படுவதாகவும், இதுதொடர்பாக நடவடிக்கை எடுக்க தயாரிப்பாளர் சங்கம் தயங்குவதாகவும் நடிகர் விஷால் குற்றம்சாட்டியுள்ளார். சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய நடிகர் விஷால், திரையரங்குகளில் தான் புதிய திரைப்படங்கள் திருட்டுத்தனமாக படம் பிடிக்கப்படுவதாக குற்றம்சாட்டினார். பல திரையரங்குகளில் ஆப்பரேட்டர் அறைக்குள் இருந்து ரகசியமாக படம் பிடிப்பதாக கூறினார்.நாட்டை குட்டி சுவராக்கும் பாலியல் ( Erotic Seducing , Violence Terror ),  எரோடிக் காட்சிகள் மற்றும் வன்முறை காட்சிகளை காட்டி இளையதலைமுறையை கெடுக்கும் இந்த பெரிய பட்ஜெட் மாஸ் சினிமாக்களை திருட்டு விசிடியால்தான் ஒழித்து கட்ட முடியும். அத்தனை சினிமா கீரோக்களும் கருப்பு பண முதலைகள்தான் .சிறிய பட்ஜெட்டில் எடுக்கப்படும் படங்களுக்கு மட்டும்தான் ஆதரவு கொடுக்கவேண்டும்

குறிப்பாக பிவிஆர் குழும திரையரங்கின் மீது நடவடிக்கை எடுக்க தயாரிப்பாளர் சங்கம் தயங்குவதாக குற்றம்சாட்டினார். திருட்டு விசிடிகள் தயாரிக்கப்படுவதை தடுக்க கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அவர் வலியுறுத்தினார். dinamalar.com

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக