புதன், 18 மே, 2016

மதிமுகவிலிருந்து விலகினார் மணிமாறன் .. தென் சென்னை மாவட்ட மதிமுக செயலாளர்...

வைகோவுடன் ஏற்பட்ட கருத்து வேறுபாட்டால், அவரது தீவிர ஆதரவாளராக செயல்பட்ட மேலும் ஒரு மாவட்ட செயலாளர் விலகியுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மதிமுக பொதுச் செயலர் வைகோவின் தீவிர ஆதரவாளராக செயல்பட்டவர் வேளச்சேரி மாவட்ட செயலாளர் மணிமாறன். சட்டப்பேரவை தேர்தலுக்கு முன், மக்கள் நலக் கூட்டணியை வைகோ உருவாக்கியதில், மணிமாறனுக்கு உடன்பாட்டில்லை என்று கூறப்படுகிறது. இதனால், வேளச்சேரி தொகுதியில் போட்டியிடுமாறு வைகோ உத்தரவிட்டும், அதனை ஏற்க மறுத்த மணிமாறன், தேர்தல் பணிகளில் இருந்து ஒதுங்கியிருந்தார். இந்நிலையில், மணிமாறன் இன்று அக்கட்சியிலிருந்து விலகுவதாக அறிவித்துள்ளார். ஏற்கனவே, மதிமுக பொருளாளர் மாசிலாமணி தொடங்கி, பாலவாக்கம் பாலு, தூத்துக்குடி ஜோயல் வரை முக்கிய நிர்வாகிகள், மாவட்டச் செயலாளர்கள் மதிமுகவில் இருந்து விலகியுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. ns7.tv/ta

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக