சனி, 21 மே, 2016

அதிமுகவின் தேர்தல் செயலராக ராஜேஷ் லக்கானி!. அரவக்குறிச்சி தஞ்சாவூர்... ராஜ்யசபா தேர்தல்.. இரண்டு வாக்குகள்

கலைஞர் முகநூல்: :தமிழகத்திலே உள்ள தேர்தல் ஆணையம்
ஜெயலலிதாவின் அடிமையாகச் செயல்படுகிறது....
செய்தியாளர் :- எதற்காக இது போன்று மூன்று வாரங்களுக்கு தேர்தல் தேதியை தள்ளி வைக்கிறார்கள்?
பதில் :- விரைவில் மாநிலங்களவை உறுப்பினர்களுக்கான தேர்தல் வரவுள்ளது. அதனால் இந்த இரண்டு வாக்குகள் முக்கியமாகக் கருதப்படுகிறது. ஏற்கனவே குறிப்பிட்ட தேதியில் தேர்தல் நடக்காமல், அதை நிறுத்த வேண்டுமென்ற ஜெயலலிதாவின் விருப்பப்படி இந்த முயற்சிகள் நடைபெறுகின்றன என்று கருதுகிறேன். தமிழகத்திலே உள்ள தேர்தல் ஆணையம் ஜெயலலிதாவின் அடிமையாகச் செயல்படுகிறது என்று தான் எண்ண வேண்டியுள்ளது. மேலே உள்ள நாலு படங்களிலும் நாலு வித்தியாசங்கள் அல்லது நாலு ஒற்றுமைகள்  உள்ளது ... கண்டுபிடியுங்கள் பார்க்கலாம்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக