வெள்ளி, 27 மே, 2016

திருமாவளவன் :திமுகவும், அதிமுகவும் பெருமைப்பட எதுவுமே இல்லை!

திமுகவும், அதிமுகவும் தங்களது வெற்றியை நினைத்து பெருமைப்பட்டுக் கொள்ள எதுவுமே இல்லை என்று விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல்.திருமாவளவன் கூறியுள்ளார்.நடந்து முடிந்த தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில் விடுதலை சிறுத்தைகள் கட்சி 25 இடங்களில் போட்டியிட்டது. ஆனால், அதன் தலைவர் தொல்.திருமாவளவன் உட்பட அனைவரும் தோல்வியை தழுவின.>இந்த தேர்தல் முடிவுகள் குறித்து ஆலோசிப்பதற்காக விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தேர்தல் பொறுப்பாளர்கள் கூட்டம், சென்னை அசோக் நகரில் நடைபெற்றது.அப்போது செய்தியார்களிடம் பேசிய திருமாவளவன், "சட்டப்பேரவைத் தேர்தலில் திமுக,அதிமுக எல்லா தொகுதிகளிலும் 100 சதவீதம் பணம் கொடுத்துள்ளன.

ஆர்.கே.நகர், திருவாரூர், கொளத்தூர் என தலைவர்கள் போட்டியிட்ட தொகுதிகளிலும் பணப் பட்டுவாடா பெரிய அளவில் நடந்துள்ளது.
திமுகவும், அதிமுகவும் தங்களது வெற்றியை நினைத்து பெருமைப்பட்டுக் கொள்ள எதுவுமே இல்லை. வாக்குக்கு பணம் கொடுத்து மக்கள் மீது ஊழல் கறையை அக்கட்சிகள் பூசியுள்ளன. பணநாயகம்தான் வென்றுள்ளது. இந்த முறைகேடுகள் எதையும் தேர்தல் ஆணையம் தடுக்கவில்லை.

;எங்கள் அணி வாக்குக்காக பணம் கொடுக்கவில்லை. எனினும், எங்களுக்கு கணிசமான வாக்குகள் கிடைத்துள்ளன. எங்கள் மீது மக்களுக்கு உள்ள நம்பிக்கையைத்தான் இது காட்டுகிறது.

;எங்களுடைய முயற்சி வெற்றி பெறாவிட்டாலும், எங்கள் நோக்கம் நல்லது. எனவே, இந்த தோல்வி எங்கள் அணியை எந்த விதத்திலும் பாதிக்காது. நாங்கள் வெற்றியை நோக்கி வேகமாக பயணிப்போம்” என்றார் webdunia.com

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக