வெள்ளி, 27 மே, 2016

சீனாவின் நிறவெறி விளம்பரம்


bbc.com: சலவை பவுடர் விளம்பரம் ஒன்றிற்காக சீன விளம்பர நிறுவனம் ஒன்று தயாரித்த விளம்பரம் இனவாதத்தை வெளிக்காட்டுவதாக சர்ச்சை வெடித்துள்ளது.அந்த விளம்பரத்தில் ஒரு சீனப் பெண், கறுப்பு இன ஆண் ஒருவரை வாஷிங் மெஷினுக்குள் தள்ளிவிடுகிறார். அதில், ஏற்கனவே விளம்பரத்தில் சொல்லப்படும் சலவை பவுடர் கலக்கப்பட்டுள்ளது. வாஷின் மெஷின் சில சுழற்சிகள் சுழன்ற பிறகு, அந்த பெண் வாஷின் மெஷினின் கதவுகளை திறக்கிறார். அதிலிருந்து, வெள்ளை நிற தோல் உடைய சீன இளைஞர் ஒருவர் வெளி வருகிறார். இதுகுறித்து கருத்து தெரிவித்துள்ள ஒரு இணையதள பார்வையாளர், இந்த விளம்பரத்தை தயாரித்தவர்கள் இனவெறி என்பது சிக்கலான விஷயம் என்பதை மறந்துவிட்டனர் என்றுள்ளார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக