ஞாயிறு, 8 மே, 2016

கனிமொழி : ஜெயலலிதா பேசுறதுல 90 சதவீதம் உண்மை இருக்காதுங்கிறது எல்லாருக்கும் தெரியும்

நக்கீரன்: தி.முக.வின் தேர்தல் பிரச்சாரத்தில் கலைஞர், ஸ்டாலினுக்கு அடுத்த படியாக கனிமொழி தீவிரமாக இருக் கிறார். பரபரப்பான பிரச்சார பயணத்திற்கிடையில் நக்கீரனுக்காக அவர் அளித்த பேட்டி.நக்கீரன் : உங்களின் பிரச்சாரத்திற்கு மக்கள் மத்தியில் எந்தளவுக்கு வரவேற்பு உள்ளது?">கனிமொழி : தமிழகத்தின் பாதி இடங்களுக்கு சென்று வந்திருக்கிறேன். அனைத்து இடங்களிலும் நல்ல வரவேற்பு உள்ளது. அ.தி.மு.க ஆட்சியின் அவலத்தால் பாதிக்கப்பட்ட மக்கள் ஆட்சி மாற்றத்தை எதிர்பார்த்து காத்திருக்கிறார்கள். கலைஞர்  தந்துள்ள தேர்தல் அறிக்கையால் தி.மு.க.வுக்கான ஆதரவு பெருகி வருகிறது.

நக்கீரன் : கிரானைட், மணல்கொள்ளையை தி.மு.க. தடுக்கத் தவறியதாகவும் அதிமுக ஆட்சிதான் தடுத்தது என்றும் பரப்புரை செய்கிறாரே ஜெ.?

கனிமொழி : எல்லாமே அவங்க ஆட்சிக் காலத்தில் நடந்ததுதான். ஆனால் அவங்க அதை தடுக்கல. அத னால நீதிமன்றம் தலையிட்ட பிறகுதான் ஜெயலலிதா எல்லா நடவடிக்கையும் எடுக்குறாங்க.  தேர்தல் நேரத்திலேயோ எப்போதுமோ ஜெயலலிதா பேசுறதுல 90 சதவீதம் உண்மை இருக்காதுங்கிறது எல்லாருக்குமே தெரிஞ்ச விஷயம்.

எதை வேண்டுமானாலும் தேர்தல் நேரத்தில் பேசக் கூடிய, பொய் பரப்புரை செய்வதற்கு அஞ்சாதவர்தான் ஜெயலலிதா

நக்கீரன் :   நில அபகரிப்பு, கட்டப் பஞ்சாயத்து, ரவுடிகள் ராஜ்ஜியம் இவை எதுவுமில்லாத, மின்வெட்டு என்பதே இல் லாத மாநிலம் என சிறப்பான ஆட்சியைத்  தந்ததாகவும், செம்பரம்பாக்கம் ஏரியைத் திறந்துவிடவில்லை என் றும் பிரச்சாரம் செய்கிறாரே ஜெ.?

கனிமொழி : செம்பரம்பாக்கம் ஏரியை படிப்படியாக திறக்காமல் ஒரே நேரத்தில் திறந்தது தான் சென்னைக்கு ஆபத்தை ஏற்படுத்தியது என்பது தமிழக மக்களுக்கே தெரியுமே. அவங்க எப்படி ஆட்சி நடத்து கிறார்கள் என்பதை அனுபவித்து உணர்ந்த வர்கள் நீங்கள் (நக்கீரன்). அதனால   ரவுடி ராஜ்ஜியம் பற்றி இதுக்கு மேல விளக்கம் சொல்ல வேண்டிய அவசியமில்லை.  அதுமட்டுமில்லாமல் மின்வெட்டே இல்லாத மாநிலம் என்று சொல்லிக்கிறாங்க. ஆனால் நான் போற இடங்களில் -மக்களை சந்திக்கும் இடங்களில் கேட்கிறேன், "உங்க வீட்ல மின் வெட்டு இல்லையா'ன்னு. எல்லாரும் சிரிக்கிறாங்க.

நக்கீரன் :  கோவில்பட்டியில் போட்டி யிடாததற்கு தி.மு.க.தான் காரணம் என்று தொடர்ந்து பல்வேறு குற்றச்சாட்டுகளை தி.மு.க. மீது அடுக்கிக்கொண்டே இருக்கிறாரே வைகோ... அதற்கு என்ன காரணம்?

கனிமொழி : தி.மு.க எந்தக் காலத்திலும் ஜாதியை ஏற்றுக்கொண்ட தில்லை. அதற்கான அவசியமும் தி.மு.கவுக்கு இல்லை. இது அவருக்கே தெரியும்.

நக்கீரன் :   தேர்தல் அதிகாரி குறித்து இவ்வளவு தாமதமாக தி.மு.க. புகார் கொடுத்தது ஏன்? ராஜேஷ் லக்கானி செயல்பாடுகளில் என்னென்ன குற்றங்கள் உள்ளன?

 கனிமொழி : யாரா இருந்தாலும் அவங்களுக்கு ஒரு வாய்ப்பு கொடுக் கணும். எடுத்த உடனே குற்றச்சாட்டு வைக்கிறது நியாயம் இல்லை. இப்ப அவர்களின் செல்பாடுகளை பார்த்து தலைமைத் தேர்தல் ஆணையத்திடம் பல முறை பல அதிகாரிகளை மாற்ற வேண் டும் என்று கோரிக்கை வைத் துள்ளோம். அவங்க யாருன்னா ஆளுங்கட்சிக்கு ஆதரவாக வெளிப்படை யாக செயல்பட்டவர் கள். இப்ப தி.மு.க கோரிக்கையை ஏற்று நடவடிக்கைகள் எடுத்து வருகிறது தலைமைத் தேர் தல் ஆணையம்.

நக்கீரன் : ஈழப்பிரச்சினையில் துரோகம் செய்ததாக குற்றம்சாட்டப்படும் காங்கிரஸுடன் கூட்டணி அமைத்து தேர்தலை சந்திக்கிறீர்களே... இது உங்களுக்கு பாதகமாக தெரியவில்லையா?

கனிமொழி :  அ.தி.மு.க ஆட்சிக்கு வந்தால் தனி ஈழம் மலரும் என்றார். ஆனா அதே ஜெயலலிதாதான் போர் நடக்கும் போது அப்பாவி மக்கள் இறந்த போது கூட சாதாரண விஷயம் அப்படின்னாங்க. அங்கிருக்கக் கூடியவங்களை கூட்டி வந்து தூக்கில் போடணும்னு சொன்னாங்க. எல்.டி. டி.ஈ.யை தடை செய்யணும்னு சொன்னாங்க. இப்படி முன்னுக்குப் பின் முரணாக பேசக் கூடியவர் ஜெயலலிதா. இந்த 5 வருடங்களில் இலங்கைத் தமிழர்களுக்காக ஒரு முறையாவது குரல் கொடுத்திருக்காரா ஜெ.? அவர்களோட வாழ்வாதாரம் மீட்டெடுக்கப்பட வேண்டும், உரிமைகள் தரப்பட வேண்டும் இதற்காக எதை செய்திருக்கிறார்; எதுவும் செய்யல. ஆனாலும் வந்து தி.மு.கவையே மறுபடியும் மறுபடியும் குறை சொல்வதற்கு பின்னணியில வேற ஏதோ இருக்கு.

நக்கீரன் : இந்தியாவிலேயே மகளிர் பாதுகாப்பில் முன்னணி மாநிலமாக தமிழகம் செயல்படுகிறது என்றும் உள்ளாட்சித்தேர்தலில் மூன்றில் ஒரு பங்கு மகளிருக்கு இட ஒதுக்கீடு 1996-ல் கலைஞர் கொண்டு வந்ததாக பொய் சொல்கிறார். 94-ல் கொண்டுவந்தது தான்தான் என்றும் சொல்கிறாரே ஜெ.?

கனிமொழி : நான் சொல்லவில்லை. தேசிய பெண்கள் பாதுகாப்பு ஆணையம் சொல்கிறது.. இந்தியாவில் பெண்களுக்கு பாது காப்பு இல்லாத மாநிலங்களில் தமிழ்நாட்டை 9-வது இடத்தில் வைத்திருக்கிறது. ஜெயலலிதா சொல்ற ஒவ்வொரு பொய்க்கும் பதில் சொல்லிக்கிட்டு இருந்தால் தேர்தல் முடிந்துவிடும். செயல்படாத இந்த ஆட்சியில் தங்கள் குறைகளை மறைத்துக் கொள்வதற்காக மற்றவர்கள் செஞ்ச அத்தனை சாதனைகளையும் அவர் தனதாக்கிக் கொள்ளப் பார்க்கிறார்.

சந்திப்பு : இரா.பகத்சிங்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக