ஞாயிறு, 8 மே, 2016

மைதாவில் ரசாயனம் கலப்பா? ஆய்வு செய்ய நீதிமன்றம் உத்தரவு


மைதா மாவில் ரசாயனம் கலக்கப் பட்டுள்ளதா என்பதை ஆய்வு செய்து, தேவையான நடவடிக்கையை எடுக்கு மாறு தமிழக உணவு பாது காப்பு, தரக் கட்டுப்பாட்டுத் துறைக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள் ளது.
நாகை மாவட்டம், வேதாரண்யம் தாலுகா, தெற்கு தேத்தாக்குடி கிரா மத்தைச் சேர்ந்தவர் கே.ராஜேந்திரன். இவர் சென்னை உயர்நீதிமன்றத் தில் தாக்கல் செய்துள்ள மனுவில் கூறியிருப்பதாவது:-
கோதுமையில் உள்ள நார்ச் சத்துகளை அகற்றி, வெள்ளை நிறத்துடன் மைதா மாவு தயாரிக்கப்படு கிறது. இது வெண்மையா கவும், மிருதுவாகவும் இருக்கச் சேர்க்கப்படும் அலொட்சான் எனும் ரசா யனப் பொருள் விலங்கு களில் கணையத்தில் பீட்டா செல்களை அழித்து,
இன் சூலின் சுரப்பதைத் தடுக்க பயன்படுத்தப்படுவதாகும். மைதாவில் தயாரிக்கப்படும் பரோட்டா, ரொட்டிகள், கேக் வகைகளை சாப்பிடு வோரின் கணையத்தில் உள்ள பீட்டா செல்கள் அழிக்கப்படுகின்றன. இத னால், இன்சுலின் சுரப்பது தடுக்கப்பட்டு, ஏராளமா னோர் சர்க்கரை நோயால் பாதிக்கப்பட்டுள்ளனர். ஆகவே, இந்த வகையான மைதா மாவை அமெரிக்கா போன்ற நாடுகள் தடை செய்துள்ளன.
ரசாயனக் கலவை கொண்ட மைதா மாவை மனிதர்களை மெதுவாக கொல்லும் விஷம் என்று மருத்துவர்கள் குறிப்பிடு கின்றனர். ஆகவே, இந்த வகை மாவுக்கு தடை விதிக்கவேண்டும் என்று அந்த மனுவில் குறிப்பிட் டிருந்தார். இந்த மனுவை திங்கள்கிழமை விசாரித்த தலைமை நீதிபதி எஸ்.கே.கவுல்,
நீதிபதி எம்.எம். சுந்தரேஷ் ஆகியோர் பிறப் பித்த உத்தரவில் கூறியிருப் பதாவது:- மனுதாரர் கொடுத்த புகாரின் அடிப்படையில், தமிழக உணவு பாதுகாப்பு மற்றும் தரக் கட்டுப்பாட் டுத் துறை ஆணையர் ஆய் வுகளையும், விசாரணையை யும் மேற்கொள்ள வேண் டும். குற்றச்சாட்டில் உண்மை இருப்பதாக தெரியவந்தால், ரசாயன கலவை கொண்ட மைதாவை தடை விதிக்க சட்டப்படியான நடவடிக் கைகளை 3 மாதங்களுக்குள் மேற்கொள்ள வேண்டும் என்று உத்தரவிட்டனர்.  viduthali.in

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக